Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வேலையில்லாத நபர்கள்.. நீங்க எல்லாம் ஆளே கிடையாது.. விமர்சனங்களுக்கு புவனேஸ்வர் குமார் மனைவி பதிலடி

மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர் புவனேஸ்வர் குமார் மீதான விமர்சனங்களுக்கு அவரது மனைவி நுபுர் நகார் கடுமையாக பதிலடி ஒன்றை கொடுத்துள்ளார்.

இந்திய அணியின் அனுபவ வீரராக விளங்கும் புவனேஸ்வர் குமார் கடந்த சில போட்டிகளில் முக்கியமான கட்டத்தில் ரன்களை வாரி வழங்குகிறார்.

ஆசிய கோப்பை மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா தோல்வி அடைந்ததற்கு புவனேஸ்வர் குமார் வீசிய கடைசி கட்ட ஓவர்களே காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மோசமான பந்துவீச்சு

மோசமான பந்துவீச்சு

பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடைசி கட்டத்தில் 18 பந்துகளை புவனேஸ்வர் குமார் வீசி 49 ரன்களை விட்டுக் கொடுத்திருக்கிறார். இதன் காரணமாகவே மூன்று போட்டியிலும் இந்தியா தோற்றதாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். புவனேஸ்வர் குமாரை அணியை விட்டு நீக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

கடும் வார்த்தைகள்

கடும் வார்த்தைகள்

இந்த நிலையில் விமர்சனங்களுக்கு அவரது மனைவி நுபுர் நகார், கடுமையாக பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் தற்போது எல்லாம் மக்கள் மதிப்பற்றவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு எந்த வேலையும் கிடையாது. இதனால் வன்மத்தையும் கோபத்தையும் பரப்புவதற்கு அவர்களுக்கு அதிக நேரம் இருக்கிறது.

மதிப்பு கிடையாது

மதிப்பு கிடையாது

நான் அவர்களுக்கு கூறிக் கொள்வது ஒன்றே ஒன்றுதான். உங்களுடைய கருத்துக்களையும் வார்த்தைகளையும் இங்கு யாரும் கவனிக்க போவது கூட கிடையாது. உங்களை ஒரு ஆளாக நினைப்பதும் கிடையாது. எனவே உங்களை உயர்த்திக்கொள்ள நேரத்தை ஒதுக்குங்கள் அதற்கு வாய்ப்பே இல்லை என்றும் எனக்கு தெரியும் என்று கடுமையாக சாடியுள்ளார்.

ரசிகர்கள் அட்வைஸ்

ரசிகர்கள் அட்வைஸ்

நேற்று முதல் புவனேஸ்வர் குமார் மீது ரசிகர்கள் மட்டுமல்லாமல் கவாஸ்கர் உள்ளிட்டோர் விமர்சித்து வந்தனர். இந்த நிலையில் அவரது மனைவி காட்டமாக பதில் அளித்துள்ளது ரசிகர்களை மேலும் எரிச்சல் அடைய செய்துள்ளது.கிரிக்கெட் போட்டியில் சரியாக செயல்படவில்லை என்றால் விமர்சனம் வரத்தான் செய்யும் , அதற்கு கோபப்படாமல் இனி வரும் போட்டிகளில் சிறப்பாக ஆடுங்கள். அதை விட்டுவிட்டு தேவையில்லாத வார்த்தைகள் எல்லாம் பயன்படுத்தாதீர்கள் என்று புவனேஸ்வர் குமார் மனைவிக்கு ரசிகர்கள் அட்வைஸ் செய்து வருகின்றனர்.

Story first published: Thursday, September 22, 2022, 18:17 [IST]
Other articles published on Sep 22, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+