Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய டி20 அணியில் இடம் பிடிப்பது பாக்கியம்.. ஆனால் என் கையில் எதுவும் இல்லை- புவனேஸ்வர் குமார்

பெங்களூரு: ஐபிஎல் 2026 சீசனில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி தனது சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துக்கொண்டது. இந்த வெற்றியில் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமாரின் பங்களிப்பு மிக முக்கியமானதாக அமைந்தது. அந்தத் தொடரில் 28 விக்கெட்டுகளை வீழ்த்தி, அதிக விக்கெட் எடுத்தவர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். பர்பிள் நிறத் தொப்பியை வென்ற ககிசோ ரபாடாவிடமிருந்து வெறும் ஒரு விக்கெட் வித்தியாசத்தில்தான் இவர் முதலிடத்தைத் தவறவிட்டார்.

36 வயதான புவனேஷ்வரின் பந்துவீச்சு, குறிப்பாக 'வொபல் சீம்' (wobble seam) நுட்பம் டெக்னிக்கல் ரீதியாகப் பலரையும் கவர்ந்துள்ளது. சச்சின் டெண்டுல்கர், புவனேஷ்வர் தனது பந்தை எவ்வாறு லாவகமாகப் பயன்படுத்தி பேட்ஸ்மேன்களைத் திணறடிக்கிறார் என்பதை விளக்கி, சமூக வலைதளத்தில் இரண்டு நிமிடக் காணொளியே வெளியிட்டிருந்தார்.

இந்த சிறப்பான ஆட்டத்தினால், இந்திய அணிக்கு அவர் மீண்டு வருவாரா என்ற விவாதம் எழுந்துள்ளன. இது தொடர்பாக பேசிய புவனேஸ்வர் குமார், , "நான் விளையாட வேண்டும் என்று காட்டிக்கொள்ள விரும்புவதில்லை. அது எனது இயல்பு கிடையாது. ஒவ்வொருவரும் அவரவர் வேலையைச் சரியாகச் செய்கிறார்கள்.

IND vs AFG: முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்ன? அபிஷேக் நாயர் கணிப்பு

IND vs AFG: முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்ன? அபிஷேக் நாயர் கணிப்பு

அணியைத் தேர்வு செய்வது தேர்வுக்குழுவினரின் முழுமையான பொறுப்பு. நான் தகுதியானவன் என்று அவர்களுக்குத் தோன்றினால், அவர்கள் கண்டிப்பாக என்னைத் தேர்ந்தெடுப்பார்கள்," எனத் தெரிவித்துள்ளார்."நான் என்ன செய்ய வேண்டுமோ, அதை ஏற்கனவே சிறப்பாகச் செய்துவிட்டேன். ஒருவேளை நான் இந்திய அணிக்காகப் விளையாடாமல் இருந்திருந்தால், அந்த வாய்ப்பிற்காகக் காத்திருந்திருப்பேன்."

"இந்திய அணிக்காக விளையாடுவது சாதாரண விஷயமல்ல. அந்த வாய்ப்பைப் பெற்ற பாக்கியசாலிகளுள் நானும் ஒருவன்," எனப் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.சர்வதேச கிரிக்கெட்டில் புவனேஷ்வர் குமார் கால்பதித்த விதம் மிகவும் பிரம்மாண்டமானது. தனது அறிமுகப் போட்டியின் முதல் பந்திலேயே பாகிஸ்தான் வீரர் முகமது ஹபீஸின் விக்கெட்டை வீழ்த்தி அனைவரையும் வியக்க வைத்தார்.

IND A vs SL A: ருதுராஜ் அபார சதம்.. தோல்வி விளிம்பில் இருந்த இந்தியா ஏ திரில் வெற்றி

IND A vs SL A: ருதுராஜ் அபார சதம்.. தோல்வி விளிம்பில் இருந்த இந்தியா ஏ திரில் வெற்றி

அந்த பந்துவீச்சு எப்படி நிகழ்ந்தது என்பதே தனக்கு விசித்திரமாக இருப்பதாக அவர் ஒருமுறை குறிப்பிட்டிருந்தார். இதுவரை அனைத்து வகையான சர்வதேசப் போட்டிகளிலும் சேர்த்து மொத்தம் 294 விக்கெட்டுகளை வீழ்த்தி, தனது கிரிக்கெட் பயணத்தின் முத்திரையைப் பதித்துள்ளார்.

Story first published: Wednesday, June 10, 2026, 13:38 [IST]
Other articles published on Jun 10, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+