Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2வது பந்திலேயே அவுட்டான ஜேசன் ராய்... ஸ்டம்பை தெறிக்கவிட்ட புவனேஸ்வர் குமார்!

அகமதாபாத் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 5வது டி20 போட்டி துவங்கி நடைபெற்று வருகிறது.

இதில் இங்கிலாந்து டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 224 ரன்களை குவித்துள்ளது.

இதையடுத்து இங்கிலாந்து களமிறங்கிய நிலையில் முதல் ஓவரை போட்ட புவனேஸ்வர் குமார் தனது இரண்டாவது பந்திலேயே இங்கிலாந்தின் முக்கியமான விக்கெட்டை அவுட் செய்தார்.

5வது போட்டி

5வது போட்டி

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 5வது போட்டி அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இரு அணிகளும் இதுவரை விளையாடியுள்ள 4 போட்டிகளில் தலா இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்துள்ளன. இந்நிலையில் இந்த போட்டி தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் போட்டியாக அமைந்துள்ளது.

இந்தியா 224 ரன்கள் குவிப்பு

இந்தியா 224 ரன்கள் குவிப்பு

இந்நிலையில் டாஸ் வென்று இங்கிலாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்த நிலையில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 224 ரன்களை குவித்துள்ளது. விராட் கோலி 52 பந்துகளில் 80 ரன்களை குவித்தார். ரோகித் சர்மா அரைசதம் அடித்த நிலையில் 32 ரன்களில் சூர்யகுமார் அவுட்டானார்.

ஜேசன் ராய் டக்-அவுட்

ஜேசன் ராய் டக்-அவுட்

இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியின் துவக்க வீரர் ஜேசன் ராய் டக் -அவுட்டானார். முதல் ஓவரை புவனேஸ்வர் குமார் போட்ட நிலையில், இரண்டாவது பந்திலேயே ஸ்டம்ப்பை தெறிக்கவிட்டார் புவனேஸ்வர் குமார். இதையடுத்து அதிகமாக ரன்களை அடிக்கும் கனவுடன் மைதானத்திற்கு வந்த ஜேசன் ராய் கடுப்புடன் பெவிலியன் திரும்பினார்.

6 ரன்கள்... 1 விக்கெட்

6 ரன்கள்... 1 விக்கெட்

முதல் இரண்டு ஓவர்களில் புவனேஸ்வர் குமார் 6 ரன்களை மடடுமே கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தினார் புவனேஸ்வர் குமார். இந்த தொடரில் அவர் தனது சிறப்பான பார்மை மீண்டும் நிரூபித்துள்ளார். காயம் காரணமாக கடந்த சில மாதங்களாக இந்திய அணியின் இணையாத புவனேஸ்வர் இந்த தொடர்மூலம் மீண்டும் பார்மிற்கு திரும்பியுள்ளார்.

Story first published: Saturday, March 20, 2021, 22:18 [IST]
Other articles published on Mar 20, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+