Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

புவனேஸ்வர் குமார் விலகல்.. இந்திய அணிக்கு கேப்டனான க்ருனால் பாண்டியா.. ஹாங்காங் சிக்சஸ் அதிரடி

மும்பை: 2026 ஹாங்காங் சிக்சஸ் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ள இந்திய அணியில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்த மூத்த வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் இந்தத் தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ஆல்ரவுண்டர் க்ருனால் பாண்டியா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் புவனேஸ்வருக்கு மாற்றாக குஜராத் டைட்டன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் குல்வந்த் கெஜ்ரோலியா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதனை ஹாங்காங் கிரிக்கெட் வாரியம் சனிக்கிழமை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்தது.

ஹாங்காங் சிக்சஸ் தொடரில் இந்திய அணியை புவனேஸ்வர் குமார் வழிநடத்துவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், நியூசிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட சர்வதேச டி20 தொடருக்கான இந்திய அணியில் புவனேஸ்வர் குமார் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தாய் நாட்டுக்காக விளையாடுவதே முதன்மையானது என்பதால் அவர் தேசிய அணியுடன் இணைகிறார் என்று ஹாங்காங் கிரிக்கெட் வாரியம் வாழ்த்தி வழியனுப்பியுள்ளது.

Bhuvneshwar Kumar Exits Indian Team for Hong Kong Sixes Krunal Pandya Named as India Captain

இந்திய அணிக்கு க்ருனால் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட முக்கிய காரணம் உள்ளது. அவர் உள்நாட்டு கிரிக்கெட்டில் பரோடா அணியையும், ஐபிஎல் போட்டிகளில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியையும் கேப்டனாக வழிநடத்திய அனுபவம் கொண்டவர். கடந்த 5 ஆண்டுகளாக இந்திய அணியில் இடம் கிடைக்காதபோதும், ஐபிஎல்லில் இதுவரை 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். கடந்த 2025 முதல் ஆர்சிபி அணிக்காக விளையாடி வரும் இவர், அந்த அணி அடுத்தடுத்து 2 முறை கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக அமைந்தார்.

ஹாங்காங் சிக்சஸ் தொடருக்கான 7 வீரர்கள் கொண்ட பலமான இந்திய அணியில் கேப்டன் க்ருனால் பாண்டியா, ஷஷாங்க் சிங், ராகுல் திவேதியா, ராகுல் திரிபாதி, நிதிஷ் ராணா, தமிழக வேகப்பந்து வீச்சாளர் டி. நடராஜன் மற்றும் குல்வந்த் கெஜ்ரோலியா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இதில் ராகுல் திரிபாதியைத் தவிர மற்ற 6 வீரர்களும் 2026 ஐபிஎல்லில் விளையாடியவர்கள். குரூப் சி பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி, அப்பாஸ் அப்ரிடி தலைமையிலான பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரக அணிகளை எதிர்த்து விளையாட உள்ளது.

Story first published: Saturday, October 17, 2026, 13:30 [IST]
Other articles published on Oct 17, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+