Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இவ்ளோ ‘விஸ்வாசமா’.. தோனி குறித்து புவனேஷ் கூறிய வார்த்தைகள்... நெகிழ்ச்சியில் ஆழ்ந்த ரசிகர்கள்!

இலங்கை: எம்.எஸ்.தோனி, தனக்கு உதவியது குறித்து பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் பேசியுள்ளது ரசிகர்களை மனம் உருகவைத்துள்ளது.

இந்திய அணியில் நட்சத்திர பவுலராக திகழ்ந்து வருபவர் புவனேஷ்வர் குமார். குறிப்பாக தோனி கேப்டன்சியில் சிறப்பாக செயல்பட்டவர்.

இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் வாய்ப்பு பெறாத இவர் தற்போது இலங்கை சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை டூர்

இலங்கை டூர்

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய 'ஏ' அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இருப்பதால் இந்த அணிக்கு ஷிகர் தவான் கேப்டனாகவும், புவனேஷ்வர் குமார் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ராகுல் டிராவிட் பயிற்சியாளராக செயல்படவுள்ளார்.

நேரலை

நேரலை

இந்நிலையில் இந்த போட்டி குறித்து புவனேஷ்வர் குமாரிடம் நடத்தப்பட்ட நேர்காணலின் போது, அவரின் இன்ஸ்டா பதிவுகள் குறித்தும் கேட்கப்பட்டது. அதில் தோனி ஓய்வு அறிவித்த போது, தான் போட்ட இன்ஸ்டா பதிவு பற்றியும் புவனேஷ்வர் குமார் பேசினார்.

உருக்கமான கருத்து

உருக்கமான கருத்து

அதில், அனைவருக்கும் தோனி ஒரு நல்ல விளையாட்டு வீரராக தெரியும். ஆனால் அவர் எதுபோன்ற மனிதர் என்பதை உணர்த்த தான் நான் பதிவிட்டேன். அவர் எப்போது மற்றவர்களுக்கு உதவக்கூடியவர். நீங்கள் எந்த வீரர்களிடம் வேண்டுமானாலும் தோனி பற்றி கேட்கலாம். அனைவரும் அவரின் உதவும் மனப்பாண்மை குறித்து தான் சொல்வார்கள். இளைஞர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டி என புவனேஷ்வர் குமார் தெரிவித்துள்ளார்.

நன்றி பதிவு

நன்றி பதிவு

தோனியின் ஓய்வின் போது புவனனேஷ்வர் குமார் போட்ட இன்ஸ்டா பதிவில், லட்சியத்தை அடைய கடுமையாக போராடினால் நிச்சயம் அது நிறைவேறும் என நீங்கள் கற்றுக்கொடுத்தீர்கள். உங்கள் கிரிக்கெட் பயணத்தில் நானும் இருந்ததில் கவுரவமாக நினைக்கிறேன். உங்களிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டே மஹி பாய். உங்களது வழிகாட்டுதல் என்றும் எங்களுக்கு விளையாட்டிலும் சரி, வாழ்க்கையிலும் சரி உதவு என குறிப்பிட்டிருந்தார்.

Story first published: Thursday, July 1, 2021, 0:00 [IST]
Other articles published on Jul 1, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+