Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மீண்டும் இந்திய அணியில் நடராஜன், புவனேஸ்வர் குமார்.. ஹாங்காங் சிக்சஸ் தொடருக்கான அணி அறிவிப்பு

மும்பை: சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஹாங்காங் சிக்சஸ் 2026 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அனுபவ வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார், தமிழக வேகப் பந்துவீச்சாளர் நடராஜன் மற்றும் ஆல் ரவுண்டர் க்ருனால் பாண்டியா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். புவனேஸ்வர் குமார் இந்த அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 12 நாடுகள் பங்கேற்கும் இந்த அதிரடி கிரிக்கெட் திருவிழா வரும் அக்டோபர் 30 முதல் நவம்பர் 1 வரை ஹாங்காங்கில் உள்ள டின் குவாங் ரோடு மைதானத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடரில் இந்திய அணி 'சி' பிரிவில் இடம்பிடித்துள்ளது. இதே பிரிவில் பலம் வாய்ந்த பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

Bhuvneshwar Kumar T Natarajan Returns to Team India Squad Announced for the Hong Kong Sixes Tournament

இந்தத் தொடருக்கான இந்திய அணியில் அதிரடி பேட்டர்கள் மற்றும் அனுபவ பந்துவீச்சாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். புவனேஸ்வர் குமார், க்ருனால் பாண்டியா, நிதிஷ் ராணா, ஷஷாங்க் சிங், தமிழகத்தின் யார்க்கர் மன்னன் டி.நடராஜன், ராகுல் திவேதியா மற்றும் ராகுல் திரிபாதி ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

புவனேஸ்வர் குமார் கடைசியாக 2022 நவம்பரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணிக்காக விளையாடினார். அதன்பின் தேசிய அணியில் வாய்ப்பு கிடைக்காதபோதிலும், 2026 ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக அபாரமாகப் பந்துவீசி அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் 2-வது இடத்தைப் பிடித்து அசத்தினார்.

கடைசி கட்டத்தில் அதிரடி காட்டக்கூடிய ஷஷாங்க் சிங், ராகுல் திவேதியா ஆகியோருடன் துல்லியமாக யார்க்கர் வீசும் நடராஜனும் அணியில் உள்ளதால், இந்த முறை ஹாங்காங் சிக்சஸ் கோப்பையை இந்திய அணி வெல்லும் என ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.

ஹாங்காங் சிக்சஸ் என்பது 6 ஓவர் போட்டியாகும். ஒரு அணியில் 6 வீரர்கள் மட்டுமே இடம் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹாங்காங் சிக்சஸ் தொடருக்கான இந்திய அணி: புவனேஸ்வர் குமார், க்ருனால் பாண்டியா, ஷஷாங்க் சிங், ராகுல் திவேதியா, நிதிஷ் ராணா, ராகுல் திரிபாதி, டி. நடராஜன்

Story first published: Monday, October 5, 2026, 14:30 [IST]
Other articles published on Oct 5, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+