Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரே நாளில் 2 சாதகமான முடிவு.. இந்தியாவுக்கு லக்..உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளியில் அதிரடி மாற்றம்

துபாய் : ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. முதல் 2 இடங்களை பிடிக்கும் அணியே இறுதிப் போட்டிக்கு செல்லும்.

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி சுற்று வரும் ஜூன் மாதம் 7ஆம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இன்னும் டாப் 2 இடத்தில் எந்த அணி பிடிக்கும் என்று முடிவு செய்யப்படவில்லை. அதே சமயம், இந்தியாவை பொறுத்தவரை ஒரே நாளில் 2 முடிவுகள் சாதகமாக அமைந்துவிட்டது.

இந்தியா வெற்றி

இந்தியா வெற்றி

ஏற்கனவே பாகிஸ்தான் அணி இங்கிலாந்துடன் டெஸ்ட் தொடரை இழந்ததை அடுத்து, அந்த அணிக்கு இறுதி போட்டிக்கு செல்லும் வாய்ப்பு பறிப்போனது. அதே போல் இன்று வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை இந்திய அணி வென்றுவிட்டது. இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்தியா 3வது இடத்திற்கு முன்னேறியது.

தென்னாப்பிரிக்கா தோல்வி

தென்னாப்பிரிக்கா தோல்வி

இந்த நிலையில், தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர், இந்தியாவை பொறுத்தவரை முக்கிய தொடராகும். இதில், முதல் டெஸ்ட் போட்டி இரண்டு நாட்கள் முடிவதற்குள் நிறைவு பெற்றது. இதில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றதால், தென்னப்பிரிக்காவின் புள்ளிகள் சரிந்தது.

இந்தியாவுக்கு 2வது இடம்

இந்தியாவுக்கு 2வது இடம்

இதன் மூலம் 3வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 2வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. ஆஸ்திரேலிய அணி 76.92 சதவீதத்துடன் முதல் இடத்திலும்,55. 77 சதவீதத்துடன் இந்தியா 2வது இடத்திலும், 54.55 சதவீதத்துடன் தென்னாப்பிரிக்கா 3வது இடத்திலும் உள்ளது. இந்திய அணி எஞ்சிய 5 போட்டியில் 4 போட்டியில் வென்றாலே இறுதிப் போட்டிக்கு முன்னேறி விடும்.

வாய்ப்பு பிரகாசம்

வாய்ப்பு பிரகாசம்

ஆனால் தென்னாப்பிரிக்க அணியை பொறுத்தவரை பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை வீழ்த்துவது என்பது எளிதான காரியம் அல்ல. அதே சமயம் அடுத்த பிப்ரவரி, மார்ச் மாதத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை தென்னாப்பிரிக்கா 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது இது அந்த அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்த தொடராகும். இந்தியாவை பொறுத்தவரை, இனி தென்னாப்பிரிக்க அணி விளையாடும் அனைத்து போட்டியிலும் தோற்க வேண்டும். அப்படி நடந்தால் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகும்.

Story first published: Sunday, December 18, 2022, 14:35 [IST]
Other articles published on Dec 18, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+