Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

BBL 13 : நான் சிக்ஸ் தான் கொடுப்பேன்.. அம்பயர் எடுத்த முடிவு.. பொங்கிய ரசிகர்கள்.. என்ன நடந்தது?

மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் லீக் டி20 தொடரில் ஒரு பேட்ஸ்மேன் அடித்த பந்து மைதானத்தின் கூரையில் பட்டு பவுண்டரி எல்லைக்கு முன்பே கீழே விழுந்தது.

அப்போது தங்களுக்குள் விவாதம் செய்த கள அம்பயர்கள் அதை சிக்ஸ் என அறிவித்தார்கள். பிக் பாஷ் லீக் தொடரில் மாற்றப்பட்ட விதிகளால் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. இது உலக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறி இருக்கிறது. சிலர் இது ஏமாற்று வேலை என விமர்சனம் செய்து வருகின்றனர்.

Big Bash League 2023 - 2024 : Chris Lynn hit the ball into roof and got six

இந்தியாவின் ஐபிஎல் தொடருக்கு நிகராக ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் லீக் டி20 தொடர் நடத்தப்பட்டு வருகிறது. 2023 - 24 சீசன் தொடர் கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்று வருகிறது. அதில் 18வது போட்டியில் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் - மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிகள் மோதின.

இந்தப் போட்டியில் அடிலெய்டு அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் மூன்றாம் வரிசையில் களமிறங்கிய கிறிஸ் லின் அதிரடி ஆட்டம் ஆடினார். போட்டி நடந்த மெல்போர்ன் டாக்லாண்ட்ஸ் அரங்கில் ஆடுகளத்தை மறைக்கும் வகையில் மேற்கூரை உள்ளது. கிறிஸ் லின் உயரமாக அடித்த பந்து அந்த மேற்கூரையில் பட்டு பவுண்டரி எல்லைக்கு சில அடி தூரம் முன்பு கீழே விழுந்தது.

பொதுவாக இப்படி பேட்ஸ்மேன் அடித்த பந்து ஏதேனும் பொருள் மீது பட்டு கீழே விழுந்தால் அந்த பந்தை "டெட் பால்" (Dead ball) என அறிவித்து மீண்டும் பந்துவீச்சாளரை பந்து வீச சொல்வார் அம்பயர். ஆனால், இந்த முறை களத்தில் இருந்த அம்பயர்கள் புரூஸ் ஆக்சன்ஃபோர்ட் மற்றும் ஜெரார்ட் அபூட் சில நிமிடங்கள் விவாதம் செய்து அதை சிக்ஸ் என அறிவித்தார்கள்.

எப்படி இது சாத்தியம்? பவுண்டரி கோட்டை தாண்டாத பந்து சிக்ஸா? என பல ரசிகர்கள் குழம்பினர். ஆனால், பிக் பாஷ் லீக் தொடரில் இந்த விதியில் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் சில ஆடுகளங்கள் மழைக்கு நடுவே நிறுத்தாமல் போட்டிகளை நடத்தும் வகையில் மேற்கூரையுடன் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. சில சமயம் பந்து உயரமாக செல்லும் போது அந்த கூரையில் படுவதால் மீண்டும் பந்து வீச வேண்டி உள்ளது. அதனால், சிக்ஸ் அடிக்கும் வாய்ப்பு பறிபோவதாக அதிருப்தி இருந்தது.

இந்த நிலையில், இனி மேற்கூரையில் பந்து பட்டு கீழே விழுந்தால் அது சிக்ஸரா அல்லது டெட் பாலா? என அம்பயரே முடிவு செய்து கொள்ளலாம் என விதியில் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. அதாவது பந்து மேற்கூரையில் படும் இடம், பவுண்டரி எல்லைக்கு அருகே இருந்தால் இது சிக்ஸ் சென்று இருக்கக் கூடும் என அம்பயரே முடிவு செய்து கொள்ளலாம்.அப்படி இல்லாமல் பாதி தூரத்திலேயே பந்து மேலே பட்டு கீழே விழுந்தால் அது டெட் பால் என அறிவிக்கப்படும். அதன்படி கிறிஸ் லின் அடித்த பந்து சிக்ஸ் என அம்பயர்கள் அறிவித்தனர்.

இது தவறான விதி என ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். ஒருவேளை பந்து உயரே சென்றால் அதை கேட்ச் பிடிக்கக் கூட வாய்ப்பு உள்ளது. அப்படி என்றால் அம்பயர் பாதி தூரத்தில் பந்து கீழே விழுந்தால் அவராக இது கேட்ச் பிடிக்கப்பட்டு இருக்கும் என முடிவு செய்து அவுட் கொடுக்கலாமா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Story first published: Saturday, December 30, 2023, 14:53 [IST]
Other articles published on Dec 30, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+