For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அஸ்வின் செஞ்சது மறந்து போச்சா? பேட்ஸ்மேனை மிரட்டி தவிக்க விட்ட கிறிஸ் மோரிஸ்!

Recommended Video

Big Bash Leauge | Chris Morris mankad to Marcus Stoinis

சிட்னி : ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஷ் லீக் டி20 தொடரில் கிரிஸ் மோரிஸ் மன்கட் விக்கெட் எடுப்பது போல பாவனை செய்து பேட்ஸ்மேனை மிரட்டினார்.

அப்போது கிரீஸில் நின்று இருந்த பேட்ஸ்மேன் மார்க்ஸ் ஸ்டோனிஸ் ஒரு நிமிடம் மிரண்டு போனாலும், தான் கிரீஸில் இருப்பதை உறுதி செய்தார்.

மன்கட் முறை

மன்கட் முறை

2019 ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின் கிரிக்கெட்டில் பலரும் அறியாத மன்கட் எனும் ரன் அவுட் முறையை உலக அளவில் பிரபலப்படுத்தினார்.

ரன் அவுட் விதி

ரன் அவுட் விதி

எதிர்முனை பேட்ஸ்மேன் பந்துவீச்சாளர் பந்தை வீசும் முன் கிரீஸை விட்டு வெளியே சென்றால், பந்துவீச்சாளர் பந்து வீசுவதை நிறுத்தி விட்டு அவரை ரன் அவுட் செய்ய விதி உள்ளது.

எச்சரிக்கை செய்வர்

எச்சரிக்கை செய்வர்

எனினும், பெரும்பாலான வீரர்கள் அப்படி கிரீஸை விட்டு வெளியேறும் பேட்ஸ்மேனை எச்சரிக்கை மட்டுமே செய்வர். அதன் பின்னும் அந்த பேட்ஸ்மேன் மீண்டும், மீண்டும் அதே தவறை செய்தால் மன்கட் முறையில் ரன் அவுட் செய்யலாம்.

அஸ்வின் செய்த மன்கட்

அஸ்வின் செய்த மன்கட்

ஆனால், 2019 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அஸ்வின், மன்கட் முறையில் ஜோஸ் பட்லரை ரன் அவுட் செய்தார். முன்னதாக எந்த எச்சரிக்கையும் செய்யவில்லை.

பெரிய சர்ச்சை

பெரிய சர்ச்சை

அது பெரிய சர்ச்சை ஆனது. மேலும், உலக அளவில் மன்கட் முறை ரன் அவுட் பற்றி தெரியாதவர்களும் தெரிந்து கொண்டனர். இந்த நிலையில், பிக் பாஷ் லீக் தொடரில் அதை நினைவு படுத்துவதைப் போல வேண்டுமென்றே ரன் அவுட் செய்வது போல வேடிக்கை காட்டி மிரட்டினார் கிறிஸ் மோரிஸ்.

பிக் பாஷ் லீக் போட்டி

பிக் பாஷ் லீக் போட்டி

மெல்போர்ன் ஸ்டார்ஸ் - சிட்னி தண்டர் அணிகள் மோதிய லீக் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் சிட்னி அணிக்காக ஆடிய கிறிஸ் மோரிஸ் பந்து வீச ஓடி வந்த போது பந்து அவரது கையில் இருந்து தவறியது.

மன்கட் பாவனை

மன்கட் பாவனை

எனினும், ஓடி வருவதை நிறுத்தாத அவர் ஸ்டம்ப்புகளின் அருகே வந்து ரன் அவுட் செய்வதை போல வெறும் கையை வைத்து மன்கட் அவுட் செய்வது போல பாவனை செய்தார். அப்போது எதிர்முனையில் இருந்த பேட்ஸ்மேன் மார்க்ஸ் ஸ்டோனிஸ், மோரிஸ் கையில் இருந்த பந்து கீழே விழுந்ததை கவனிக்கவில்லை.

புன்னகைத்தார்

அதனால், ஸ்டோனிஸ் ரன் அவுட் ஆகி விட்டோமோ என பதறினார். பின் சுதாரித்து, மோரிஸ் வேடிக்கையாக செய்வதை கண்டு புன்னகைத்தார். இந்தப் போட்டியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி வெற்றி பெற்றது.

Story first published: Thursday, January 2, 2020, 19:48 [IST]
Other articles published on Jan 2, 2020
English summary
Big Bash League : Chris Morris reminded Ashwin’s Mankad to Marcus Stoinis in a funny way.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+