
பிக் பாஷ் போட்டி
அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் - மெல்போர்ன் ஸ்டார்ஸ் மோதிய பிக் பாஷ் லீக் போட்டியில் ஸ்ட்ரைக்கர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 3 விக்கெட்களை இழந்து ஆடி வந்தது.

பவுண்டரி நோக்கி சென்ற பந்து
அப்போது அலெக்ஸ் கேரி, வெல்ஸ் களத்தில் இருந்தனர். வெல்ஸ் ஒரு பந்தை பவுண்டரியை நோக்கி அடித்தார். அப்போது பீல்டிங் செய்ய ஓடி வந்த மார்கஸ் ஸ்டோனிஸ் பந்தை பவுண்டரி எல்லைக்கு மிக அருகே வந்த பின் தடுத்தார்.

பீல்டிங் செய்தார்
எனினும், அப்போது அவர் பவுண்டரி எல்லையின் பக்கமாக ஓடி வந்ததால், அந்த வேகத்தில் பவுண்டரி எல்லையை தாண்டி ஓட வேண்டிய நிலை வந்தது. அதே சமயம், பந்தை ஃபோர் செல்வதில் இருந்து தடுக்க வேண்டும் என்ற முடிவை எடுத்தார்.

கிட்டிப்புள் ஆடிய ஸ்டோனிஸ்
தன் கால்களுக்கு இடையே பந்தை பின்புறமாக உள்ளே தள்ளினார் ஸ்டோனிஸ். கிட்டிப்புள் ஆடும் போது சிலர் கால்களுக்கு இடையே, பின்புறமாக அடிப்பார்கள். அதே போல, செயல்பட்டு சாமர்த்தியமாக பந்தை தடுத்தார்.

பாராட்டு
மார்கஸ் ஸ்டோனிஸ் செய்த பீல்டிங் ரசிகர்களை கவர்ந்தது. இணையத்தில் பலரும் அவரை பாராட்டி பதிவிட்டு வருகின்றனர். பிக் பாஷ் லீக் தொடரின் ட்விட்டர் பக்கத்தில் அவரின் அசாத்திய பீல்டிங் வீடியோ பகிரப்பட்டுள்ளது.

அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் ரன் குவிப்பு
இந்தப் போட்டியில் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணி 20 ஓவர்களில் 174 ரன்கள் குவித்தது. அலெக்ஸ் கேரி 45, வெல்ஸ் 68 ரன்கள் குவித்தனர். அடுத்து மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி ஆடியது.
மெல்போர்ன் தோல்வி
அந்த அணியில் ஆடிய ஸ்டோனிஸ் 33, மேக்ஸ்வெல் 43, ஹேண்ட்ஸ்கோம்ப் 34 ரன்கள் எடுத்தனர். எனினும்,அந்த அணி 20 ஓவர்களில் 169 ரன்கள் மட்டுமே எடுத்தது. 5 ரன்கள் வித்தியாசத்தில் அடிலெய்டு அணி வெற்றி பெற்றது.


Click it and Unblock the Notifications











