Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

BBL : உயிருக்கே ஆபத்து ஆகிடும்.. பதறிய ஆஸி. வீரர் ஹார்டி.. மேட்ச்சை நிறுத்திய அம்பயர்.. என்ன நடந்தது?

சிட்னி : ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஷ் லீக் டி20 தொடரில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் - மெல்போர்ன் ரெனிகேட்ஸ் இடையே நடந்த போட்டி 6.5 ஓவர்கள் மட்டும் வீசப்பட்ட நிலையில் கைவிடப்பட்டது.

2023 - 2024 பிக் பாஷ் லீக் சீசனின் நான்காவது போட்டி ஜீலாங் மைதானத்தில் நடைபெற்றது. இதில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் - மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிகள் மோதின. பெர்த் அணி முதலில் பேட்டிங் செய்தது. முதலில் இருந்தே பிட்ச்சின் ஒரு பக்கம் மட்டும் பந்து தாறுமாறாக எகிறியது.

Big Bash League 2023-24 : Perth Scorchers vs Melbourne Renegades match abandoned due to unsafe pitch

இதனிடையே பெர்த் அணி 18 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்தது. அப்போது ஏழாவது ஓவரை மெல்போர்ன் அணியின் வேகப் பந்துவீச்சாளர் வில் சதர்லேண்ட் வீசினார். அப்போது பந்து பிட்ச் ஆன போது மண்ணை பெயர்த்து எடுத்துக் கொண்டு எகிறியது.

சில பந்துகள் பேட்டிங் செய்து கொண்டிருந்த ஜோஷ் இங்லிஸ் முகத்துக்கு அருகே எகிறியது. சில பந்துகள் பெரிய அளவில் பவுன்ஸ் ஆகி விக்கெட் கீப்பர் தலைக்கு அருகே சென்றது. இதற்கு காரணம், போட்டி நடக்க சில மணி நேரம் இருக்கும் போது வரை அங்கு மழை பெய்தது. பிட்ச்சை மூடி வைத்திருந்த போதும், பிட்ச்சின் ஒரு பகுதியில் மட்டும் மழை நீர் வடிந்து இருந்தது.

அதனால், அந்த பகுதி மட்டும் இலகுவாக இருந்தது. அங்கே பந்து பிட்ச் ஆன போதெல்லாம் மண்ணை பெயர்த்துக் கொண்டு வந்தது. அதனால் பிட்ச்சின் அந்த பகுதி மட்டும் மேடு பள்ளமாக மாறியது. மீண்டும் அதே இடத்தில் பந்து பிட்ச் ஆன போது பந்து அதிகமாக பவுன்ஸ் ஆகத் துவங்கியது.

இது தொடர்ந்த நிலையில், ஜோஷ் இங்லிஸ் பேட்டிங் செய்த போது எதிர்முனையில் இருந்த ஆரோன் ஹார்டி இது போன்ற மோசமான பிட்ச்சில் பேட்டிங் செய்வது ஆபத்தானது என புகார் கூறினார். பந்து ஆஃப் சைடில் போனதால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால், பந்து உடலுக்கு நேராக வந்து பவுன்ஸ் ஆனால் முகம், கழுத்து, தலையில் பலமாக தாக்கும் அபாயம் உள்ளது.

அதை ஆரோன் ஹார்டி சுட்டிக் காட்டிய நிலையில் அம்பயர்கள் விவாதம் செய்தனர். பின் போட்டியை சிறிது நேரம் நிறுத்தி விட்டு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அமைப்பு நிர்வாகிகளுடன் போட்டியை நிறுத்தி வைப்பது குறித்து பேசினர். அதன் பின் 6.5 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் போட்டியை கை விடுவதாக அறிவித்தனர். ஆரோன் ஹார்டி 20 ரன்களும், இங்லிஸ் 3 ரன்களும் எடுத்து இருந்தனர். பெர்த் அணி 6.5 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 30 ரன்கள் எடுத்து இருந்தது.

Story first published: Sunday, December 10, 2023, 16:55 [IST]
Other articles published on Dec 10, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+