Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தலையில் தாக்கிய பந்து.. மயங்கி விழுந்த ஆஸி. வீரர்.. விரைந்த ஆம்புலன்ஸ்.. பதற்றத்தில் ஆஸ்திரேலியா

சிட்னி : ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் சாம் ஹார்பர் பயிற்சி செய்த போது பந்து தலையில் தாக்கியதால் மயங்கி விழுந்தார். உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். முன்பு ஆஸ்திரேலிய வீரர் பில் ஹியூஜஸ்-கு நடந்த மோசமான நிகழ்வு போல இது இருந்ததால் ஆஸ்திரேலியாவில் பதற்றம் ஏற்பட்டது.

ஆஸ்திரேலிய டி20 தொடரான பிக் பாஷ் லீக் தொடரில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இருக்கும் சாம் ஹார்ப்பர் வலை பயிற்சியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அவர் தலையில் அணிந்து இருந்த ஹெல்மட் மீது பந்து பலமாக தாக்கியது. அவர் அந்த இடத்திலேயே மயங்கி விழுந்தார்.

Big Bash League : Sam Harper got hit in head while practicing ahead of Big Bash League 2024

உடனடியாக ஆம்புலன்ஸ் அழைக்கப்பட்டு, அவரை ஸ்ட்ரெட்சரில் ஏற்றிச் சென்று, பின் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவர் மூச்சு விடுவதை மருத்துவர்கள் உறுதி செய்த பின், அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். அவருக்கு மோசமான காயம் ஏதும் ஏற்படவில்லை என மருத்துவர்கள் உறுதி செய்தனர். அவர் தற்போது ஐசியூ-வில் இருக்கிறார்.

இதனிடையே ஆஸ்திரேலியாவில் பில் ஹியூஜஸ் இறப்புக்கு பின் ஒரு கிரிக்கெட் வீரர் தலையில் பந்து தாக்கி மயங்கி விழுந்தார் என்பதை அறிந்து பெரும் பரபரப்பு எழுந்தது. ஊடகங்களில் இந்த விவகாரம் வெளியானதை அடுத்து மக்களும் சாம் ஹார்பருக்கு என்ன நடந்தது, அவர் மீண்டு விட்டாரா? என பதற்றத்துடன் இருந்தனர். பின்னர் அவர் பாதுகாப்பாக இருப்பதை அறிந்த பின் அனைவரும் நிம்மதி அடைந்தனர்.

சாம் ஹார்ப்பர் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக இந்த சீசனில் சிறப்பாக ஆடி வந்தார். கடந்த மாதம் தன் 28வது பிறந்த நாளை கொண்டாடி இருந்தார்.

Story first published: Friday, January 5, 2024, 17:26 [IST]
Other articles published on Jan 5, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+