Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆசிய கோப்பை - பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் விலகல்.. இந்தியாவுக்கு அடிச்சது லக்..

துபாய் : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சுற்றில் இந்தியாவும், பாகிஸ்தானும் ஞாயிற்றுகிழமை மீண்டும் மோதுகிறது.

Recommended Video

AsiaCup 2022 Rohit Sharma-க்கு Captaincy பயம் வந்துடுச்சி - Mohammed Hafeez *Cricket

இந்தப் போட்டிக்காக இரு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்தயாவை விட பாகிஸ்தானுக்கு தான் சாதகமான சூழல் நிலவியது.

அதற்கு காரணம், இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஜடேஜா காயம் காரணமாக விலகினார். மேலும், கேஎல் ராகுல் போன்ற நட்சத்திர வீரரும் ஃபார்மில் இல்லாமல் உள்ளனர்.

அசுர பலம்

அசுர பலம்

இதே போன்று இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஆவேஷ் கானும், ரன்களை வாரி வழங்கி கொண்ட உள்ளார். ஆனால் மறு பக்கம், பாகிஸ்தான் அணியோ ஹாங்காங் அணியை 38 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசுர பலத்தில் உள்ளது. இந்த நிலையில் தான் பாகிஸ்தானுக்கு ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

தஹானிக்கு காயம்

தஹானிக்கு காயம்

பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஷாநவாஸ் தஹானி காயம் காரணமாக விலகினார். இதனால் அவர் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுகிழமை இந்தியாவுக்கு எதிரான போட்டியின் போது தஹானி 2 சிக்சர்கள் விளாசி, களத்திலேயே கொண்டாடி இந்திய வீரர்களை வெறுப்பேற்றியது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

கடைசி 2 போட்டி

கடைசி 2 போட்டி

இதே போன்று பந்துவீச்சிலும் கட்டுக்கோப்பாக பந்துவீசி ரன்களை விட்டு கொடுக்காமல் நெருக்கடி தருவதில் தஹானி வல்லவர். இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் கூட தஹானி 4 ஓவர் வீசி 29 ரன்களை மட்டுமே கட்டுப்படுத்தினார். இதே போன்று ஹாங்காங்க்கு எதிரான போட்டியில் தஹானி 2 ஓவர்கள் வீசி 7 ரன்கள் மட்டுமே விட்டு கொடுத்தார்.

ஹசன் அலிக்கு வாய்ப்பு

ஹசன் அலிக்கு வாய்ப்பு

தற்போது தஹானியின் விலகல் பாகிஸ்தான் அணிக்கும் பின்னடைவை தந்துள்ளது. தஹானிக்கு பதிலாக ஹசன் அலி அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹசன் அலி, இந்தியாவுக்கு எதிராக கடந்த காலங்களில் சிறப்பாக வீசக் கூடியவர். எனினும் தற்போது அவர் ஃபார்மில் இல்லாதததால் அணியில் சேர்க்கப்படாமல் இருந்தார்.

Story first published: Saturday, September 3, 2022, 19:46 [IST]
Other articles published on Sep 3, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+