For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பாகிஸ்தானுக்கா இந்த நிலைமை? 8வது ஓவரில் எல்லாம் வந்த ஸ்பின்னர்.. ரோகித்தால் பயந்து போன பாக். வேகம்

அகமதாபாத் : ஒரு கால கட்டத்தில் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் என்றால் எதிரணியின் பேட்ஸ்மேன்கள் கால் நடுங்குவார்கள். மற்ற ஆசிய அணிகள் எல்லாம் சுழற் பந்துவீச்சை வைத்து கால்ம் ஓட்டி வந்த நிலையில் பாகிஸ்தான் மட்டும் வேகப்பந்து வீச்சாளர்களை நம்பியே வலம் வந்தது.

Big blow for Pakistan as their fast bowling department leaking runs in ind vs pak game

வக்கார் யூனிஸ், வசீம் அக்ரம், போன்ற வீரர்கள் அடுத்தடுத்து பந்து வீசி வருவார்கள். இதனால் எப்போது தான் சுழற்பந்துவீச்சு வருமோ என எதிரணி வீரர்கள் நினைப்பார்கள். ஒரு காலத்தில் அப்படி இருந்த பாகிஸ்தான அணி தற்போது எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் என்பது போல் 8வது ஓவரில் எல்லாம் சுழற் பந்துவீச்சாளர்களை வைத்து விளையாட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது.

உலகக்கோப்பை வரலாற்றில் இந்தியாவிடம் பாகிஸ்தான் அணி ஒரு போட்டியில் கூட வென்றதில்லை. இந்த நிலையில் அகமதாபாத்தில் நடைபெறும் இந்த லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி பெறும் என அந்நாட்டு ரசிகர்கள் மிகவும் நம்பிக்கையுடன் காத்திருந்தனர். இதற்கு தகுந்தார் போல் பாகிஸ்தான அணியும் இன்று முதலில் பேட்டிங் செய்யும்போது 152 ரன்கள் மூன்று விக்கெட்டுகளை இழந்து அபார நிலையில் இருந்தது.

இதனால் பாகிஸ்தான் 300 ரன்களுக்கு மேல் அடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்திய வீரர்களின் அபார பந்துவீச்சால் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து 191 ரன்களில் எல்லாம் சுருண்டது. இந்த நிலையில் 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்கடன் களமிறங்கிய இந்திய வீரர்கள் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சை சுளுக்கு எடுத்தனர்.

குறிப்பாக பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர்கள் ஷாகின் அப்ரிடி நான்கு ஓவர் வீசிய நிலையில் ஒரு விக்கெட்டை மட்டுமே எடுத்து 32 ரன்கள் விட்டுக் கொடுத்தார். அவருடைய ஓவரில் ஐந்து பவுண்டரிகள் ஒரு சிக்சர் சென்றது. அதேபோன்று ஹசன் அலி ஓவரில் மூன்று ஓவர்கள் எல்லாம் 5 பவுண்டர்கள் சென்றது. அதேபோன்று ஹரிஷ் ரவுப் ஒரு ஓவரில் 14 ரன்களை விட்டுக் கொடுத்தார்.

Big blow for Pakistan as their fast bowling department leaking runs in ind vs pak game

இதில் இரண்டு சிக்ஸர்கள் அடங்கும். இதனால் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சு எடுபடாத நிலையில் பாகிஸ்தான் அதனை ஒப்புக்கொண்டு சுழற் பந்து வீச்சாளர்களை ஆட்டத்தின் எட்டாவது ஓவரில் எல்லாம் பயன்படுத்த தொடங்கியது. எனினும் அந்த ஓவரையும் ரோகித் சர்மா அடித்து நொறுக்கினார். ஆறு புள்ளி நான்காவது ஓவர்கள் எல்லாம் இந்திய அணி 50 ரன்கள் என்று ஸ்கோரை கடந்தது.

Story first published: Saturday, October 14, 2023, 19:06 [IST]
Other articles published on Oct 14, 2023
English summary
Big blow for Pakistan as their fast bowling department leaking runs in ind vs pak game பாகிஸ்தானுக்கா இந்த நிலைமை? 8வது ஓவரில் எல்லாம் வந்த ஸ்பின்னர்.. ரோகித்தால் பயந்து போன பாக். வேகம்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+