For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அடிக்கு மேல் அடி! விவாகரத்துக்கு மத்தியில் சாஹலுக்கு வந்த மேலும் ஒரு பின்னடைவு.. ஷமி மாதிரி மீள்வாரா

மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக தனிப்பட்ட வாழ்க்கை மிகப்பெரிய பாதிப்பை சந்தித்து இருக்கிறது. முகமது சமி ஷிகர் தவான், ஹர்திக் பாண்டியா போன்ற பிரபல கிரிக்கெட் வீரர்கள் தங்களுடைய மனைவியை விவாகரத்து செய்தனர். இதனால் அவர்களுடைய கிரிக்கெட் வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது.

ஆனால் இதில் முகமது சமி, ஹர்திக் பாண்டியா போன்றவர்கள் மீண்டு வந்து கிரிக்கெட்டில் சாதித்து விட்டார்கள். ஆனால் ஷிகர் தவான் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றுவிட்டார். தற்போது இந்த பட்டியலில் நட்சத்திர சுழற் பந்துவீச்சாளர் சாகலும் இணைந்திருக்கிறார்.

yuzi chahal dhanashree divorce rumours

34 வயதான சாகல் இந்திய அணிக்காக 72 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 121 விக்கெட்களும், 80 டி20 போட்டிகளில் விளையாடி 96 விக்கெட்களும் வீழ்த்தி இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் ஐபிஎல் தொடரில் 160 போட்டியில் விளையாடி 205 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார்.

இப்படி பல சாதனைகளை சாகல் படைத்திருந்தாலும், அவர் கடைசியாக இந்திய அணிக்காக விளையாடியது கடந்த ஆகஸ்ட் மாதம் 2023 ஆம் ஆண்டு தான். அதன் பிறகு ஒன்றரை ஆண்டுகளாக இந்திய அணியில் அவர் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. எனினும் நடந்து முடிந்த டி20 உலக கோப்பையில் சாகல் இந்திய அணிக்கு தேர்வாகியிருந்தும் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை.

இந்த சூழலில் சாகல் இந்திய அணியில் இடம் பிடிக்க வேண்டும் என தீவிரமாக முயற்சி செய்து வந்தார். சையது முஸ்தாக் அலி தொடரில் 7 போட்டிகளில் விளையாடிய சாகல் 10 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். ஆனால் அதன் பிறகு தான் சாகலின் வாழ்க்கையில் மிகப்பெரிய சூறாவளி வீசியது.

சாவலுக்கும் அவருடைய மனைவி தனுஸ்ரீக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருப்பதாக அடிக்கடி செய்தி வெளியாகும். சாகலின் மனைவியான தனுஸ்ரீ வேற ஒரு நபருடன் தொடர்பில் இருப்பதாக புரளிகளும் கிளம்பின. இந்த நிலையில் தற்போது இந்த விஷயம் பூதாகரமாக மாறி இருக்கிறது. சாகலும் அவருடைய மனைவியும் சமூக வலைத்தளத்தில் ஒருவரை ஒருவர் பின் தொடர்வதை நிறுத்தி விட்டார்கள்.

தாங்கள் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் இருவரும் நீக்கி இருக்கிறார்கள். இதனால் சாகலும் தனுஷின் விவாகரத்து செய்யப் போவதாக புரளிகள் கிளம்பின. இந்த சூழலில் சாகல் இந்திய ஒரு நாள் அணியில் இடம் பிடிக்க முயற்சி செய்து வந்தார். ஆனால் அவர் விஜய் ஹசாரே கோப்பை தொடரிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக பார்ட் வாட்ஸ் என்ற இளம் வீரரை ஹரியான அணி சேர்த்து இருந்தது.

இன்னும் விஜய் ஹசாரே கோப்பை தொடரில் நாக் அவுட் சுற்றுக்கு சாகல் இடம் பெறுவான் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் அவர் நீக்கப்பட்டு இருக்கிறார். இதனால் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இடம்பெற வேண்டும் என்ற சாகலின் கனவு நிறைவேறாமல் போய் இருக்கிறது. ஏற்கனவே வருண் சக்கரவர்த்தி, பிஸ்னாய் போன்ற வீரர்கள் t20 கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், இனி சாகல் இந்திய கிரிக்கெட் அணிக்கு திரும்புவது கேள்விக்குறியாக விட்டது. ஏற்கனவே சாகலின் தனிப்பட்ட வாழ்க்கையில் சரிந்துள்ள நிலையில் மீண்டும் கிரிக்கெட்டில் சாதிப்பாரா? இல்லை ஓய்வு பெற்று விடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Story first published: Thursday, January 9, 2025, 11:23 [IST]
Other articles published on Jan 9, 2025
English summary
Big Blow For Yuzi Chahal as indian team come back shutdown as Dhanashree divorce rumours அடிக்கு மேல் அடி! விவகாரத்துக்கு மத்தியில் சாஹலுக்கு வந்த மேலும் ஒரு பின்னடைவு.. ஷமி மாதிரி மீள்வாரா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+