Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“5000 போலீஸ் பாதுகாத்தும் என்ன பயன்” பாக், - வெஸ்ட் இண்டீஸ் தொடரில் புது பிரச்சினை..ரசிகர்கள் கவலை

கராச்சி: தீவிரவாதிகளால் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுக்கு அச்சுறுத்தல் இருந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸால் அச்சுறுத்தல் வந்துள்ளது.

Recommended Video

PAK vs WI 5000 ராணுவ வீரர்களை நிறுத்த Pakistan உத்தரவு | Oneindia Tamil

தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக பாகிஸ்தான் நாட்டில் கடந்த 10 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் பெரும் அளவில் நடைபெறுவதில்லை.

கடந்த அக்டோபர் மாதத்தில் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்த நியூசிலாந்து அணி, தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாக கூறி தொடரிலிருந்து வெளியேறியது.

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம்

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம்

இதன்பிறகு இங்கிலாந்து அணியும் பாதுகாப்பு குறைபாடு எனக்கூறி தொடரை ரத்து செய்துவிட்டது. இதனால் இனி பெரிய அணிகள் யாரும் பாகிஸ்தானுக்கு செல்ல மாட்டார்கள் என எண்ணியபோது தான் வெஸ்ட் இண்டீஸ் அணி சென்றுள்ளது. அங்கு இரு அணிகளுக்கு இடையேயும் 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறவுள்ளது.

பாதுகாப்பு ஏற்பாடுகள்

பாதுகாப்பு ஏற்பாடுகள்

இந்த தொடர் நாளை (13ஆம் தேதி) தொடங்குகிறது. இந்த தொடருக்கு எந்தவித இடையூறும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் அதிக கவனம் செலுத்துப்படுகிறது. எனினும் தீவிரவாத அச்சுறுத்தல் அதிகம் உள்ளதாக தகவல் வெளியானதால் அந்நாட்டு அரசு கடும் பாதுகாப்பு ஏற்பாட்டை செய்துள்ளது. அதாவது, 889 கமோண்டோ படை வீரர்கள், 3822 போலீசார் மற்றும் 500 RRF படை வீரர்கள், 46 டி.எஸ்.பி.கள்,315 என்.ஜி.ஓ.க்கள் மற்றும் 50 பெண் போலீசார் என 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர்.

கொரோனா அச்சுறுத்தல்

கொரோனா அச்சுறுத்தல்

இதனால் எப்படியாவது இந்த தொடர் நடைபெற்று விடும் என அனைவரும் நிம்மதி பெரு மூச்சு விட்ட நிலையில், தற்போது புது பூகம்பம் கிளம்பியுள்ளது. ஹோட்டல் அறையில் இருந்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது ஷெல்டன் காட்ரெல், ரோஸ்டன் சேஸ் மற்றும் கெயில் மேயர்ஸ் ஆகியோருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர்களுடன் சேர்த்து அணி ஊழியர் ஒருவருக்கும் கொரோனா பரவியுள்ளது.

ரசிகர்களின் கவனம்

ரசிகர்களின் கவனம்

இந்த 4 பேரையும் தனிமைப்படுத்தியுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, திட்டமிட்டபடி போட்டிகள் நடைபெறும் என அறிவித்துள்ளது. மீதமுள்ள அனைத்து வீரர்களையும் பாதுகாப்பான முறையில் தங்கவைக்கப்பட்டு டி20 தொடரையாவது முடித்துவிட வேண்டும் என்ற நோக்கத்துடன் உள்ளது. இப்படி பல்வேறு சிக்கல் கொண்ட இந்த தொடர் தற்போது உலக கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Story first published: Sunday, December 12, 2021, 19:59 [IST]
Other articles published on Dec 12, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+