பாகிஸ்தான் வீரர்களுக்கு ஊதிய உயர்வு.. இதுல்லாம் நான் டிப்ஸ் கொடுக்குற பணம்..கோலியை விட எவ்வளவு கம்மி
லாகூர் : பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு தற்போது சம்பள உயர்வை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்திருக்கிறது. எப்போதும் ஒவ்வொரு நாட்டு அணியினருக்கும் ஆண்டு கணக்கில் தான் ஊதிய உயர்வு வழங்கப்படும்.
ஆனால் தற்போது பாகிஸ்தான் வீரர்களுக்கு மாதந்தோறும் சம்பளம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கு காரணம் உலகம் முழுவதும் நடைபெறும் டி20 கிரிக்கெட் லீக் போட்டிகளில் பாகிஸ்தான் வீரர்கள் கலந்து கொள்ள ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

இதன் காரணமாக பாகிஸ்தான் வீரர்கள் அந்தத் தொடர்களில் பங்கேற்பதை தடுக்க இப்படி ஒரு திட்டத்தை அந்நாட்டு வாரியம் தீட்டி உள்ளது. இதன் மூலம் நான்கு மடங்கு ஊதிய உயர்வு பாபர் அசாம் உள்ளிட்ட வீரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இந்தியாவைப் போலவே கிரிக்கெட் வீரர்களை மூன்று பிரிவுகளாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பிரித்துள்ளது.
அதில் முதல் பிரிவில் பாபர் அசாம், ஷாகின் அப்ரிடி , முஹம்மது ரிஸ்வான் ஆகியோர் இருக்கிறார்கள். அவர்களுக்கு மாதந்தோறும் கிட்டத்தட்ட 16,000 அமெரிக்க டாலர் ஊதியமாக வழங்கப்பட உள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்பில் 13 லட்சம் ரூபாய் ஆகும். இதன் மூலம் சுமார் ஒன்றரை கோடி ரூபாயை ஆண்டு சம்பளமாக இந்த மூன்று பாகிஸ்தான் வீரர்களும் பெற உள்ளனர்.
இதை போன்று இரண்டாவது பிரிவில் உள்ள பாகிஸ்தான் வீரர்களுக்கு பத்தாயிரம் அமெரிக்க டாலர் சம்பளமாக வழங்கப்பட உள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்பில் 8 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ஆகும். இதனை 12 மாதங்களுக்கு கணக்கு செய்தால் கிட்டத்தட்ட அவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் கிடைக்கும்.
இதேபோன்று கடைசி பிரிவில் உள்ள வீரர்களுக்கு மாதம் 2500 முதல் 5000 அமெரிக்க டாலர் சம்பளமாக வழங்கப்பட உள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்பில் நாலு லட்சத்து 13 ஆயிரம் ரூபாய் ஆகும். இதை ஒரு ஆண்டுக்கு கணக்கிட்டால் 50 லட்சம் ரூபாய் சம்பளம் ஆக இருக்கும்.

இது பாகிஸ்தான் வீரர்களுக்கு வழங்கப்படும் உச்சகட்ட சம்பளம் ஆகும் ஆனால் இதனை இந்திய வீரர்களுடன் கணக்கிட்டால் வடிவேலு ஒரு படத்தில் இது எல்லாம் நான் டிப்ஸ் கொடுக்கும் பணம் என்று சொல்லும் காமெடி தான் நினைவுக்கு வருகிறது. அந்த அளவுக்கு இந்திய வீரர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் அதிகமாகும்.
விராட் கோலி ரோஹித் சர்மா போன்ற வீரர்கள் ஆண்டு சம்பளமாகவே 7 கோடி ரூபாய் வாங்குகிறார்கள். இதேபோன்று இந்திய அணியில் மூன்றாவது பிரிவில் உள்ள வீரர்களே சுமார் 2 கோடி ரூபாய் வாங்குகிறார்கள். இது பாபர் அசாம் வாங்கும் சம்பளத்தை விட அதிகமாகும் இது தவிர இந்திய வீரர்கள் ஒரு டிரஸ் போட்டியில் விளையாடினாலே 15 லட்சம் ரூபாய் சம்பளம் கிடைக்கும் இது பாபர் அசாம் வாங்கும் மாத சம்பளத்தை விட அதிகம்.


Click it and Unblock the Notifications