Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“இதிலும் வாய்ப்பு இல்லையா?” 3வது ஒருநாள் போட்டிக்கான இந்திய ப்ளேயிங் 11.. டிராவிட் முன் உள்ள சவால்!

ட்ரினிடாட்: வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான 3வது ஒருநாள் போட்டியில் இந்தியாவின் ப்ளேயிங் 11-ஐ தேர்வு செய்வதில் குழப்பம் உருவாகியுள்ளது.

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்திய அணி 2 வெற்றிகளுடன் கைப்பற்றிவிட்டது.

தொடரின் 3வது போட்டியும் நாளை ட்ரினிடாட் நகரத்தில் உள்ள குயின்ஸ் பார்க் மைதானத்தில் நடைபெறவிருக்கிறது.

ப்ளேயிங் 11 மாற்றம்

ப்ளேயிங் 11 மாற்றம்

இந்த போட்டிக்கான இந்திய அணியின் ப்ளேயிங் 11ல் தான் டிராவிட்டிற்கு சவால் உருவாகியுள்ளது. ஏற்கனவே தொடரை கைப்பற்றிவிட்டதால் இந்திய அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு தந்து பார்க்க உள்ளனரா? அல்லது வெற்றி காம்பினேஷனை தொடர்ந்து செயல்படுத்த போகிறாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

டாப் ஆர்டர் பேட்டிங்

டாப் ஆர்டர் பேட்டிங்

ஓப்பனிங்கை பொறுத்தவரையில் கேப்டன் ஷிகர் தவானுடன், சுப்மன் கில் சிறப்பாக விளையாடினார். இஷான் கிஷான் இடதுகை பேட்ஸ்மேனாக இருப்பதால் 3வது போட்டியில் ருதுராஜ் கெயிக்வாட் வாய்ப்பு பெறலாம் எனத் தெரிகிறது. டாப் ஆர்டரில் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் சஞ்சு சாம்சன் ஃபார்முக்கு திரும்பி வருவதால் தொடர்ந்து அவர்களே விளையாடலாம்.

Recommended Video

Rahul Dravid இடத்திற்கு குறி வைக்கும் Ricky Ponting *Cricket
மிடில் வரிசை

மிடில் வரிசை

மிடில் ஆர்டரில் தீபக் ஹூடா மற்றும் சூர்யகுமார் யாதவ் மட்டும் இன்னும் பேட்டிங்கில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. டி20 உலகக்கோப்பைக்கு அவர்கள் தேவை என்பதால், டிராவிட் அவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்பு கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இஷான் கிஷானுக்கு இதில் வாய்ப்பு கிடைக்காமல் போகலாம்.

பந்துவீச்சு படை

பந்துவீச்சு படை

பவுலிங்கை பொறுத்தவரையில் இளம் வீரர் அர்ஷ்தீப் சிங்கிற்கு வாய்ப்பு கொடுத்து பார்க்க டிராவிட் திட்டமிட்டுள்ளார். எனவே ஷர்துல் தாக்கூர் நீக்கப்பட்டு அர்ஷ்தீப் சேர்க்கப்படலாம் எனத் தெரிகிறது. ஷர்துல் தாக்கூர் 2 போட்டிகளில் 5 விக்கெட்கள் எடுத்தாலும், பேட்டிங்கில் 7&3 ரன்களையே அடித்தார். அவரின் எகானமியும் அதிகமாக உள்ளது. மற்ற இரண்டு பவுலர்களாக முகமது சிராஜ் மற்றும் ஆவேஷ் கான் செயல்படலாம். சுழற்பந்துவீச்சில் அக்‌ஷர் மற்றும் சாஹல் ஜோடி நீடிக்கலாம்.

Story first published: Tuesday, July 26, 2022, 20:14 [IST]
Other articles published on Jul 26, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+