இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர் - கேஎல் ராகுல் பதவிக்கு ஆப்பு.. பும்ரா,ஜடேஜா இந்திய அணியில் இடமில்லை
மும்பை : இலங்கை அணிக்கு எதிரான 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 10ஆம் தேதி முதல் போட்டி கவுகாத்தியலும், 12ஆம் தேதி 2வது போட்டியில் கொல்கத்தாவிலும், 15ஆம் தேதி மூன்றாவத ஒருநாள் போட்டி திருவனந்தபுரத்திலு நடைபெற்றது.
இதில் காயத்திலிருந்து குணமடைந்துள்ள ரோகித் சர்மா, கேப்டனாக திரும்பி உள்ளார். இதே போன்று துணை கேப்டனாக இருந்த கேஎல் ராகுல் அதிரடியாக நீக்கப்பட்டு, அந்த பொறப்பு ஹர்திக் பாண்டியாவுக்கு தரப்பட்டுள்ளது.
பும்ரா, ஜடேஜா ஆகியோருக்கு இலங்கை தொடரில் வய்ப்பு தரப்படாதது ரசிகர்களிடையே அதிர்ச்சியை தந்துள்ளது. இதே போன்று ரிஷப் பண்ட், ஷிகர் தவான் ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.

வாய்ப்பு இல்லை
தொடக்க வீரராக ரோகித் சர்மாவும், இஷான் கிஷனும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.சுப்மான் கில்லும் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நடுவரிசையில் விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் மறறும் கேஎல் ராகுலுக்கு தேர்வுக்குழுவினர் வாய்ப்பு வழங்கி இருக்கிறார்கள். நட்சத்திர வீரர் சூர்யகுமாரும் தனது இடத்தை உறுதி செய்துள்ளார். இதில் கேஎல் ராகுல் விக்கெட் கீப்பராக இடம்பெற்றுள்ளதால் ரிஷப் பண்டுக்கு வாய்ப்பு தரப்படவில்லை.

பந்துவீச்சார்கள் படை
சுழற்பந்துவீச்சாளராக சாஹல், அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ் என மூன்று வீரர்களும் இடம் பிடித்திருக்கிறார்கள். வேகப்பந்துவீச்சாளராக முகமது ஷமி, முகமது சிராஜ், உம்ன் மாலிக் மற்றும் ஆர்ஸ்தீப் சிங் இடம்பெற்றுள்ளனர். 100 சதவீத உடல் தகுதியை எட்ட முடியாத காரணத்தால், பும்ரா, ஜடேஜா, தீபக் சாஹர் ஆகியோர் ஒருநாள் அணியில் சேர்க்கப்படவில்லை.

காரணம் என்ன?
இதே போன்று ஆர்ஸ்தீப் சிங்கிற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 6 ஒருநாள் போட்டி நடைபெறுவதால், ரிஷப் பண்ட், ஜடேஜா ஆகியோருக்கு தேர்வுக்குழுவினர்கள் ஓய்வு வழங்கி ருக்கிறார்களா என்றும் தெரியவில்லை. தவான் நீக்கப்பட்டு இருப்பதால், அவருடிடய கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்தததாக தெரிகிறது. ராகுல் இனி கேப்டன் பொறுப்பு சரி வர மாட்டார் என்று பிசிசிஐ முடிவு எடுத்துள்ளதால் ஹ்ர்திக்கிற்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்திய ஒருநாள் அணி விவரம்
ரோகித் சர்மா, சுப்மான் கில், ஹர்திக் பாண்டியா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், இஷான் கிஷன், வாசிங்டன் சுந்தர், சாஹல், குல்தீப் யாதவ், அக்சர் பட்டேல், முகமது ஷமி, முகமது சிராஜ், உம்ரான் மாலிக், ஆர்ஸ்தீப் சிங்


Click it and Unblock the Notifications