Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆரம்பமே இந்தியாவுக்கு நெருக்கடி கொடுத்த நியூசி.. உம்ரான் அதிரடி நீக்கம்.. பிளேயிங் லெவன் மாற்றம்

லக்னோ : இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி லக்னோவில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த மைதானத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த அணிகளே 5 போட்டிகளிலும் வென்று இருக்கிறது.

இதனால் டாஸ் வென்ற நியூசிலாந்த அணி கேப்டன் மிட்செல் சாண்ட்னர் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

இது குறித்து பேசிய அவர், இந்த மைதானத்தில் புள்ளி விவரங்கள் படி சேஸிங் செய்வது கடினம் என்பதை தெரிந்து கொண்டதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறினார்.

ஆடுகளம்

ஆடுகளம்

முதல் டி20 போட்டியில் நாங்கள் வெற்றி பெற்றாலும், சூர்யகுமாரும், ஹர்திக் பாண்டியாவும் சிறப்பாக விளையாடியதாக பாராட்டிய சாண்ட்னர், இதனால் பாட்டியின் நடு ஓவர்களில் விக்கெட்டுகளை எடுத்தால் தான் எங்களால் வெற்றி பெற முடியும் என்று கூறினார். இந்தியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது சுலபமான காரியம் கிடையாது என்றும் அவர் கூறினார்.

ரன்குவிக்க வேண்டும்

ரன்குவிக்க வேண்டும்

ஒருநாள் தொடரில் தோல்வி அடைந்த பிறகு தற்போது வெற்றி பாதைக்கு திரும்பியுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக குறிப்பிட்ட சாண்டனர், முதலில் விளையாடி ரன்குவிக்க வேண்டும் என்று கூறினார். இதனை தொடர்ந்து பேசிய ஹர்திக், தாமும் முதலில் பேட்டிங் செய்ய தான் நினைத்தேன்.

 அணியில் மாற்றம்

அணியில் மாற்றம்

முதலில் பந்துவீசுவதால் எந்த கவலையும் இல்லை. . முதல் போட்டிக்கு பிறகு ஆடுகளத்தை குறித்து என்னால் கணிக்க முடியவில்லை. ரசிகர்கள் பலரும் குல்தீப் யாதவும், சாஹலும் இணைந்து விளையாட வேண்டும் என்று ஆசை பாட்டார்கள்.அதற்காக இன்றைய ஆட்டத்தில் நாங்கள் உம்ரான் மாலிக்கை நீக்கிவிட்டு, சாஹலுக்கு வாய்ப்பு வழங்கி இருக்கிறோம் என்று ஹர்திக் கூறினார்.

பிளேயிங் லெவன்

பிளேயிங் லெவன்

1, சுப்மன் கில், 2,இஷான் கிஷன், 3, சூர்யகுமார் யாதவ், 4, ராகுல் திரிபாதி, 5, ஹர்திக் பாண்டியா, 6, தீபக் ஹூடா, 7, வாசிங்டன் சுந்தர், 8, சாஹல், 9, குல்தீப் யாதவ், 10, ஆர்ஸ்தீப் சிங், 11, சிவம் மவி

Story first published: Sunday, January 29, 2023, 19:23 [IST]
Other articles published on Jan 29, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+