Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

WPL இறுதி போட்டியில் வெடித்த சர்ச்சை..மும்பைக்கு ஆதரவாக செயல்பட்ட நடுவர்கள்..டெல்லி ரசிகர்கள் புகார்

மும்பை : மகளிர் பிரீமியர் லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. ஆனால், மும்பை அணி வெற்றி என்றாலே சர்ச்சை இல்லாமல் இருக்குமா

நேற்று முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 131 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்தது. இதில் தொடக்க வீராங்கனை மேக் லானிங் அதிகபட்சமாக 35 ரன்கள் எடுத்தார்.

ஷிகா பாண்டே, ராதா யாதவ் தலா ஆகியோர் 27 ரன்கள் சேர்த்த நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தொடக்க வீராங்கனை செஃபாலி வர்மா 11 பந்தில் 4 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

சர்ச்சை

சர்ச்சை

டெல்லி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் செஃபாலி வர்மா. சேவாக் போல் அதிரடியாக விளையாடி டெல்லி அணிக்கு நல்ல தொடக்கத்தை அளிக்க கூடியவர். இந்த நிலையில்,இவர் ஆட்டமிழந்த விதத்தில் தான் சர்ச்சை எழுந்தது.

நோ பால்

நோ பால்

இஸி வாங் வீசிய ஓவரில் ஒரு பந்து ஃபுல் டாசாக மாறியது. அதனை செஃபாலி அடிக்க முயன்ற போது அது கேட்ச் ஆனது. இதற்கு கள நடுவர் நோ பால் வழங்காமல் அவுட் கொடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த செஃபாலி வர்மா, டிஆர்எஸ் மூலம், அதற்கு நோ பால் கேட்டார்.

நடுவர்கள் முடிவு

நடுவர்கள் முடிவு

இதனையடுத்து ரீப்ளேவில் அது உயரமாக சென்றது தெரியவந்தது. ஆனால் மூன்றாம் நடுவர், அது நோ பால் இல்ல என்று அறிவித்தார். இது டெல்லி அணிக்கு பெரும் பின்னடைவை தந்தது. டெல்லி அணி நிர்ணயித்த ஸ்கோரை , மும்பை அணி 3 பந்துகள் எஞ்சிய நிலையில் தான் வெற்றி பெற்றது.

ரசிகர்கள் புகார்

ரசிகர்கள் புகார்

இதனால் செஃபாலி வர்மா கூடுதலாக ரன்கள் அடித்து இருந்தால் மும்பை அணி தோல்வி அடைய கூட வாய்ப்பு இருந்திருக்கும். இதனால் நடுவர்கள் மும்பைக்கு சாதகமாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நடுவர்களின் உதவியால் மும்பை அணி முக்கிய போட்டிகளில் வெற்றி பறும் என்பது ரசிகர்கள் காலம் காலமாக வைக்கும் குற்றச்சாட்டு. அதற்கு தீனி போடும் வகையில் நேற்றைய சம்பவம் நடந்துள்ளது.

Story first published: Monday, March 27, 2023, 13:54 [IST]
Other articles published on Mar 27, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+