Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய பவுலர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து..வங்கதேச போட்டியில் வந்த அதே சிக்கல்.. பயத்தில் ரசிகர்கள்

அடிலெய்ட் : டி20 உலககோப்பையில் இன்று நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் பெரிய ஆபத்து ஒன்று காத்து கொண்டுள்ளது.

அதாவது, ஒரு காலத்தில் வெளிநாட்டில் நடைபெறம் ஆடுகளம், இந்திய ஆடுகளம் போல் அமைந்தால், வீரர்களுக்கும், ரசிகர்களுக்கும் கொண்டாட்டம் தான்.

காரணம், சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான மைதானத்தில் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெறுவார்கள். ஆனால் கோலியின் காலத்திற்கு பிறகு இந்தியாவின் வேகப்பந்துவீச்சின் பலம் பல மடங்கு அதிகரித்தது.

அரையிறுதி வரை

அரையிறுதி வரை

ஆடுகளம் கொஞ்சம் ஸ்விங் செய்ய ஏதுவாக இருந்தாலும் அதனை பயன்படுத்தி இந்திய வீரர்கள் ஜொலிப்பார்கள். நடப்பு டி20 உலக கோப்பையில் பும்ரா இல்லாமலேயே இந்திய அணி அரையிறுதி வரை வந்ததற்கு இது தான் காரணம். புவனேஸ்வர் குமார், ஆர்ஸ்தீப் சிங் ஆகியோர் பவர்பிளேவில் தனது ஸ்விங்கை பயன்படுத்தி விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்,

பவர்பிளேவில் பவுலர்கள்

பவர்பிளேவில் பவுலர்கள்

நடப்பு டி20 உலககோப்பையில் பவர்பிளேவில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி 2 விக்கெட்டுகளை கைப்பற்றி 32 ரன்களை விட்டு கொடுத்தது. நெதர்லாந்துக்கு எதிராக 27 ரன்களுக்கு 2 விக்கெட், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 24 ரன்களுக்கு 3 விக்கெட், வங்கதேசத்துக்கு எதிராக விக்கெட் இழப்பின்றி 60 ரன்கள், ஜிம்பாப்வேக்கு எதிராக 28 ரன்களுக்கு 3 விக்கெட் என்று இந்திய பவுலர்கள் அசத்தினர்.

அடிலெய்ட் ஆபத்து

அடிலெய்ட் ஆபத்து

இதில் வங்கதேசத்திற்கு எதிராக மட்டும் இந்திய அணி சொதப்பியதற்கு காரணம், அடிலெய்ட் ஆடுகளத்தில் ஸ்விங் பந்துவீச்சு எடுப்படாத காரணத்தால் தான், தற்போது அரையிறுதியும் அதே மைதானம் என்றால் இந்திய பவுலர்களுக்கு கண்டம் தானே. வங்கதேசமே இப்படி அடித்தால், இங்கிலாந்து வீரர்கள் எப்படி அடிப்பார்களோ என்ற அச்சம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

கட்டாயம்

கட்டாயம்

இதனால் இந்திய அணி தங்களது யுத்தியை மாற்ற வேண்டிய நெருக்கடியில் உள்ளனர். முதலில் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு பவுலிங்கை தராமல் அஸ்வின், அக்சர் பட்டேலை வைத்து ஓவர்களை ரோகித் பயன்படுத்தினால், ஒரு அளவிற்கு கைக் கொடுக்கும். வேண்டும் என்றால் கூடுதலாக சாஹலை அணியில் சேர்த்து கொள்ளலாம்.

Story first published: Thursday, November 10, 2022, 12:41 [IST]
Other articles published on Nov 10, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+