
உலககோப்பைக்கான திட்டம்
அடுத்த ஆண்டு டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து 2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. இதற்காக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து பிசிசிஐ முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை செய்தனர். அடுத்தடுத்து மூன்று பெரிய தொடர்கள் நடைபெறுவதால் அதனை எப்படி எதிர்கொள்வது என்ற திட்டம் இந்த கூட்டத்தில் வகுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹர்திக்கிற்கு பொறுப்பு?
தொடர்ந்து ரோகித் சர்மா அனைத்து போட்டிகளிலும் விளையாட முடியாது என்ற காரணத்திற்காக ஹர்திக் பாண்டியாவை டி20 கேப்டனாக நியமிப்பது குறித்து ஆலோசனை எடுக்கப்பட்டது. இதற்காக ஹர்திக் பாண்டியாவிற்கு ஊதிய உயர்வை வழங்க பிசிசி முடிவெடுத்துள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தகவல் கூறியுள்ளது.இதேபோன்று பிசிசிஐயின் ஸ்பான்சர் ஆக விளங்கும் பைஜூஸ் மற்றும் எம் பி எல் நிறுவனங்களுக்குவரும் மார்ச் மாதம் வரை தொடர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மகளிர் ஐபிஎல்
அதன் பிறகு இந்திய அணியின் ஜெர்சிக்கு வேற நிறுவனங்கள் ஸ்பான்சர் செய்ய ஒப்பந்தம் கூறப்பட உள்ளன.தேர்வு குழு பொறுத்தவரை விண்ணப்பித்துள்ள நபர்களுக்கு வரும் நாட்களில் நேர்முகத் தேர்வு நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று மகளிர் ஐ பி எல் போட்டியை சிறப்பாக நடத்த திட்டமிட்டுள்ள பிசிசிஐ , அனைத்து போட்டிகளையும் மும்பையில் வைக்க திட்டமிட்டுள்ளது. இதேபோன்று ஆசியக் கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு இந்தியா செல்வது குறித்து விவாதிக்கப்பட்டது.

பயிற்சியாளர்கள்
இதே போன்று உலகக் கோப்பையில் பாகிஸ்தான் வராமல் சென்றால் என்ன செய்வது என்பது குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. பயிற்சியாளர்களின் சுமையை குறைக்க டெஸ்ட் ஒரு நாளுக்கு ஒரு பயிற்சியாளரும், டி20க்கு வேறு பயிற்சியாளரும் நியமிக்க பிசிசிஐ இந்த கூட்டத்தில் முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளன.


Click it and Unblock the Notifications











