Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடப்பாவிகளா.. கிரிக்கெட்ல சண்டைனா இப்படியா.. செங்கல் வீச்சு, துப்பாக்கிச் சூடு, கலவரம்!

நொய்டா : கிரேட்டர் நொய்டா அருகே இருக்கும் காலோண்டா கிராமத்தில் கிரிக்கெட் விளையாட சென்றவர்கள் பெரிய கலவரத்தை உண்டாக்கி இருக்கிறார்கள். அதில் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருப்பது பெரிய அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது.

கடந்த புதன்கிழமை விடியற்காலை காலோண்டா கிராமத்தில் சில சிறுவர்கள் கிரிக்கெட் விளையாட சென்று இருக்கிறார்கள். அப்போது ஏற்பட்ட தகராறில் கோபமடைந்த ஒருவர் நாட்டுத் துப்பாக்கி மூலம் மற்றொருவரை சுட்டுள்ளார். அதையடுத்து இரண்டு பிரிவினராக பிரிந்து செங்கல், கட்டைகள் கொண்டு தாக்கியுள்ளனர்.

Big gun and brick fight broke out during street cricket near Noida

அது மட்டுமில்லாமல் இரண்டு பிரிவினரும் துப்பாக்கி வைத்து மாற்றி மாற்றி சுட்டுக் கொண்டார்கள் என கூறப்படுகிறது. காலை ஏழு மணிக்கு காவல் நிலையத்திற்கு தொலைபேசியில் தகவல் சென்றதை அடுத்து பெரிய படையுடன் காவலர்கள் வந்து இரண்டு பிரிவினரையும் தடுத்து இருக்கிறார்கள். இதுவரை ஐந்து பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளார்கள்.

சிலர் தலைமறைவாகி விட்டார்கள். அவர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர். ஐந்து பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் உள்ளனர். அதில் ஒருவர் நிலை படுமோசமாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த கலவரத்தை அடுத்து கிராமம் முழுவதும் வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளது.

கிரிக்கெட் விளையாட துப்பாக்கி எல்லாம் எதுக்குப்பா எடுத்துட்டு போறீங்க...

Story first published: Thursday, August 30, 2018, 13:48 [IST]
Other articles published on Aug 30, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+