Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆசியக்கோப்பை 2022: இந்திய அணியில் உள்ள முக்கிய குறைபாடு.. ரோகித் எப்படி சமாளிப்பாரோ??

மும்பை: ஆசியக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்துள்ள ஆசியக்கோப்பை தொடர் வரும் ஆகஸ்ட் 27ம் தேதி முதல் செப்டம்பர் 11ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி நேற்று பிசிசிஐ-யால் அறிவிக்கப்பட்டது.

இந்திய அணி அறிவிப்பு

இந்திய அணி அறிவிப்பு

அதன்படி ரோகித் சர்மா கேப்டனாகவும், கே.எல்.ராகுல் துணைக்கேப்டனாகவும் களமிறங்குகின்றனர். விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், தீபக் ஹூடா, தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா, அஸ்வின், யுவேந்திர சாஹல், புவனேஷ்வர் குமார், ரவி பிஷ்னாய், அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பேக் அப் வீரர்களாக ஸ்ரேயாஸ் ஐயர், அக்‌ஷர் பட்டேல், தீபக் சஹார் ஆகியோர் களமிறங்குகின்றனர்.

பலவீனமான அணியா?

பலவீனமான அணியா?

இந்நிலையில் இந்த அணியில் ரோகித் சர்மா பெரிய ரிஸ்க்கை எடுத்துள்ளார். முதல் பந்து முதலே அதிரடி காட்டுவது தான் இனி எங்கள் ஃபார்முலா என ரோகித் ஏற்கனவே அறிவித்தார். அதன்படி பார்த்தால், கே.எல்.ராகுலால் எப்படி சமாளிக்க முடியும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. ஏனென்றால் இந்தாண்டு இதுவரை ஒரு சர்வதேச டி20 போட்டியில் கூட அவர் விளையாடவே இல்லை.

விபரீத முடிவு

விபரீத முடிவு

தொடைப்பகுதியில் ஏற்பட்ட காயத்தால், அனைத்து போட்டியில் இருந்தும் விலகியிருந்த கே.எல்.ராகுல், வெஸ்ட் இண்டீஸ் தொடரின் போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதனால் பெரியளவில் பயிற்சி இன்றி இருக்கிறார். காயத்தால் பல மாதங்களாக கிரிக்கெட்டே விளையாடாமல் உள்ள கே.எல்.ராகுலை நம்பி, எப்படி இவ்வளவு பெரிய தொடரில் இந்தியா ஓப்பனிங் ஆடவுள்ளது என வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

2வது பிரச்சினை என்ன

2வது பிரச்சினை என்ன

அணியில் உள்ள இரண்டாவது பிரச்சினை விராட் கோலியாகும். இங்கிலாந்து தொடரில் சொதப்பிய பின்னர், ஓய்வுக்கு சென்ற அவர், வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் வரவில்லை, ஜிம்பாப்வே தொடருக்கும் செல்ல மறுத்துவிட்டார். எனவே ஃபார்மில் இல்லாத ஒரு வீரரை எப்படி நேரடியாக ஆசியக்கோப்பையில் பயன்படுத்தப்போகின்றனர் என்ற குழப்பம் உள்ளது.

ரோகித்தின் நிலைமை

ரோகித்தின் நிலைமை

இந்திய அணி தனது முதல் போட்டியாக ஆகஸ்ட் 28ம் தேதி பாகிஸ்தான் அணியுடன் மோதுகிறது. இதில் கே.எல்.ராகுல் ஓப்பனிங், முதல் விக்கெட்டிற்கு விராட் கோலி என இந்தியாவின் தூணாக இருக்க வேண்டும். எனவே இவர்களை ரோகித் சர்மா எப்படி சமாளிக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Story first published: Thursday, August 11, 2022, 12:03 [IST]
Other articles published on Aug 11, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+