அகமதாபாத் : ஐபிஎல் கிரிக்கெட் தொடரும் இறுதி ஆட்டத்தில் சிஎஸ்கே அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் தமிழக வீரர் சாய் சுதர்சன் பொளந்து வருகிறார்.
சிஎஸ்கே வீரர்கள் அனைவரும் கில்லை நினைத்து பயந்த நிலையில் சிலபஸுக்கு வெளியில் இருந்து சாய் சுதர்சன் வந்தார். தற்போது சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வருகிறார்.

67 ரன்களுக்கு ஒரு விக்கெட் இழந்த நிலையில் 21 வயதான சாய் சுதர்சன் களத்திற்கு வந்தார். சிஎஸ்கே அணிக்காக ரெய்னா எவ்வாறு விளையாடுவாரோ அதை போல் அதிரடி காட்டி பந்து வீச்சாளருக்கு பயம் காட்டினார் சாய் சுதர்சன். இவர் எப்படி போட்டாலும் அடிக்கிறான் டா என்பது போல் சுழற் பந்துவீச்சு, வேகபந்துவீச்சு என அனைத்தையும் பவுண்டரிக்கு விரட்டி அசத்தினார் சாய் சுதர்சன்.
இதன் காரணமாக மூன்று சிக்சர், 3 பவுண்டரிகள் அடித்து 33 பந்துகளில் சாய் சுதர்சன் அரை சதம் அடித்தார். இதன் மூலம் ஐபிஎல் இறுதிப் போட்டியில் அரை சதம் அடித்த இரண்டாவது இளம் வீரர் என்ற பெருமையை சாய் சுதர்சன் படைத்தார். சாய் சுதர்சனை கட்டுப்படுத்த சிஎஸ்கே வீரர்கள் எடுத்த எந்த முயற்சியும் பலன் அளிக்கவில்லை.
குறிப்பாக துஷார்பாண்டே ஓவரின் சாய் சுதர்சன் 6 4 4 4 என வெளுத்து வாங்கினார். குறிப்பாக சாய் சுதர்சன் அடித்த சிக்சர் அங்கு நிறுத்தப்பட்டுள்ள காரில் பட்டது. இதன் மூலம் 5 லட்சம் ரூபாயை சரணாலயத்திற்கு பிசிசிஐ வழங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.டி என் பி எல் தொடரில் விளையாடி தற்போது சென்னை அணிக்கு எதிராகவே மெர்சலான பேட்டிங்கை சாய் சுதர்சன் வெளிப்படுத்தி வருகிறார். சாய் சுதர்சன் 47 பந்துகளில் 96 ரன்கள் விளாசினார். இதில் 6 சிக்சர் அடங்கும்.