Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சூர்யகுமார் ஏன் சரி பட்டு வர மாட்டாரு தெரியுமா? கடந்த 5 ஆண்டில் டெஸ்ட் ரெக்கார்ட் பாருங்க !

நாக்பூர்: அண்மை காலமாக இந்திய கிரிக்கெட் அணியின் முகமாக இருப்பவர் சூர்யகுமார் யாதவ் தான். வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் எந்த அணியாக இருந்தாலும், எந்த பந்துவீச்சாளராக இருந்தாலும், எந்த மைதானமாக இருந்தாலும் ஒன் மேன் ஷோ காட்டி வருகிறார்.

கிரிக்கெட் பார்க்கும் அனைவருமே யாருயா நீ என்று கேட்கும் அளவிற்கு ஆச்சரியத்தை நிகழ்த்தி வருகிறார். ஆனால் அதே சூர்யகுமார் யாதவை ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சேர்த்த போது, பலரும் சொல்லிய வார்த்தை "டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு சூர்யா சரிபட்டு வரமாட்டார்" என்பது தான்.

காரணம் என்ன?

காரணம் என்ன?

விபத்து காரணமாக ரிஷப் பண்ட் ஓய்வில் இருக்க, அவரைப் போலவே ஸ்பின்னர்களை அட்டாக் செய்யும் பேட்ஸ்மேன் இந்திய டெஸ்ட் அணிக்கு தேவையாக இருந்தார். அதற்காக தான் சூர்யகுமார் யாதவ் டெஸ்ட் போட்டிக்கு தேர்வும் செய்யப்பட்டிருக்கிறார். ஏனென்றால் 2020ம் ஆண்டுக்கு முதல் சூர்யகுமார் யாதவ் விளையாடிய 34 டி20 போட்டிகளில் சுழற்பந்துவீச்சுக்கு எதிராக அவரின் சராசரி 66 ஆகும். அதேபோல் ஸ்ட்ரைக் ரேட் 141.2 வைத்திருக்கிறார்.

இந்திய அணியின் திட்டம்

இந்திய அணியின் திட்டம்

ஆனால் டி20 கிரிக்கெட்டில் வீசப்படும் சுழற்பந்துவீச்சிற்கு, டெஸ்ட் கிரிக்கெட்டில் வீசப்படும் சுழற்பந்துவீச்சிக்குமான வித்தியாசம் அனைவருக்கும் தெரிந்ததே. இருந்தும் ஆஸ்திரேலியாவின் திட்டத்தை குழப்புவதற்கும், முறியடிப்பதற்கும் சூர்யகுமார் யாதவின் ஆட்டம் சரியாக இருக்கும் என்பதால் மட்டுமே டெஸ்ட் அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

உனாத்கட், கேஎஸ் பரத் வாய்ப்பு

உனாத்கட், கேஎஸ் பரத் வாய்ப்பு

ஆனால் சூர்யகுமார் யாதவ் தேர்வு செய்யப்பட்டால், ரஞ்சி கிரிக்கெட்டின் எதிர்காலம் நிச்சயம் முடிவுக்கு வரும். ஏனென்றால் ரஞ்சி கிரிக்கெட் விளையாடிய உனாத்கட், கேஎஸ் பரத் உள்ளிட்டோர் உள்ளூர் கிரிக்கெட் விளையாடி இந்திய அணியில் இடம்பிடித்துள்ளனர். ஆனால் சூர்யகுமார் யாதவ் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் ஃபார்ம் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

12 முதல்தர போட்டிகள்

12 முதல்தர போட்டிகள்

கடந்த 5 ஆண்டுகளில் சூர்யகுமார் யாதவ் வெறும் 12 முதல்தர போட்டிகளில் மட்டுமே விளையாடி இருக்கிறார். 2019ம் ஆண்டில் ரஞ்சி கிரிக்கெட்டில் 59.54 சராசரியுடன் 774 ரன்கள் சேர்த்திருக்கிறார். இதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் சூர்யகுமார் யாதவ் சிறப்பாக செயல்படவும் வாய்ப்புகள் உள்ளது. இருப்பினும் சர்ஃபராஸ் கான் போன்ற வீரர்கள் உள்ளூர் கிரிக்கெட்டில் நிரூபித்தும் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படாமல், சூர்யகுமார் யாதவ் தேர்வு செய்யப்பட்டிருப்பது கேள்வியையே ஏற்படுத்தியுள்ளது.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

ஒருவேளை நாளை தொடங்க உள்ள போட்டியில் சூர்யகுமார் யாதவ் களமிறங்கினால், அவரின் தேர்வும் ஆட்டமும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தும். ஆனால் இந்திய மைதானத்திற்கென்று ஆஸ்திரேலியா அணி சரியான வீரர்களுடன் களமிறங்கியுள்ளது. நேதன் லயன், டாட் முர்ஃபி, ஸ்வெப்சன் உட்பட ஏராளமானோர் இந்திய வீரர்களை தாக்க ஆயுத்தமாக வந்திறங்கியுள்ளனர். இவர்களிடம் இருந்து சூர்யகுமார் எப்படி தப்பிப்பார் என்று எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Story first published: Wednesday, February 8, 2023, 21:28 [IST]
Other articles published on Feb 8, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+