ஹர்திக் பாண்டியா செய்த மிகப் பெரிய தவறு.. தீபக் ஹூடாவை நடத்திய விதத்தை கவனிச்சீங்களா? வாய்ப்பு மிஸ்
ராஞ்சி : இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டியில் ஹர்திக் பாண்டியா செய்த ஒரு தவறு மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாக கிரிக்கெட் விமர்சகர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 19 ஓவர் முடிவில் 149 ரன்கள் மட்டும் எடுத்தது. ஆனால் கடைசி ஓவரில் ஆர்ஸ்தீப் சிங் வீசி அவர் 27 ரன்களை விட்டு கொடுத்தார்.
இந்திய அணியின் தோல்விக்கு இது தான் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. ஆனால் ஹர்திக் ஒரு விசயத்தை சரியாக செய்து இருந்தால், இந்த தோல்வி தவிர்க்கப்பட்டு இருக்கும்.

3 விக்கெட்டுகள்
ராஞ்சி ஆடுகளம் எடுத்த உடனே நன்றாக சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக திரும்பியது. இதனை பயன்படுத்தி கொண்டு குல்தீப் யாதவ் 4 ஓவர்கள் வீசி 20 ரன்களையும், வாசிங்டன் சுந்தர் 4 ஓவர்கள் வீசி 22 ரன்களை விட்டு கொடுத்து, இருவரும் சேர்த்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

ஹர்திக் தவறு
இதன் மூலம் ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கிறது. அதனை எதிர்கொள்ள நியூசிலாந்து வீரர்கள் தடுமாறினர். நிலைமை அப்படி இருக்க, அணியில் கூடுதலாக இருக்கும் சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் தீபக் ஹூடாவுக்கு ஹர்திக் பாண்டியா 2 ஓவர்கள் மட்டுமே வழங்கி இருந்தார்.

கடைசி ஓவர்
இதில் அவர் விட்டு கொடுத்த ரன்கள் 14 மட்டும் தான். இதனால் ஹர்திக் பாண்டியா அவருக்கு கூடுதலாக ஒரு ஓவர்களை வழங்கி இருந்தாலே, ஆர்ஸ்தீப் சிங்கை பயன்படுத்திருக்க வாய்ப்பு வந்திருக்காது. கடைசி ஓவரை வேகப்பந்துவீச்சாளருக்கு தான் வழங்க வேண்டும் என்றால் 140 கிமீ வேகத்தில் பந்து வீச கூடிய உம்ரான் மாலிக் அல்லது சிவம் மவிக்கு வழங்கி இருக்கலாம்.

அர்ஷ்தீப் சொதப்பல்
இல்லை என்றால் தீபக் ஹூடாவுக்கே வழங்கி இருக்கலாம். அர்ஷ்தீப் பார்மில் இல்லை என்று தெரிந்தும், அவருக்கு நெருக்கடியான கட்டத்தில் வாய்ப்பு கொடுத்து ஹர்திக் பாண்டியா தவறு செய்துவிட்டார். இதில் கொஞ்சம் மாற்றி செயல்பட்டு இருந்தாலே நியூசிலாந்து அணி 176 ரன்கள் என்ற இலக்கை தொட்டு இருக்காது.

முழுமையாக பயன்படுத்துவாரா?
அடுத்த போட்டியில் ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சதகமாக இருந்தால், ஹர்திக் 3 சுழற்பந்துவீச்சாளர்களையும் முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும் மைதானத்தின் சுற்று அளவும் கேப்டன் எந்த பவுலரை தேர்ந்து எடுக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும். இந்துரில் நடைபெற்ற போட்டியில் எல்லாம் மைதானத்தின் சுற்று அளவு 50, 55 மீட்டர் என்ற அளவில் தான் இருந்தது.

சேதாரத்தை தவிர்த்திருக்கலாம்
ஆனால் நேற்று நடைபெற்ற ராஞ்சி மைதானத்தில் சுற்று அளவு 70 க்கு மேல் தான் இருந்தது. கள சூழல் அப்படி இருக்க சுழற்பந்துவீச்சாளர்களை பயன்படுத்தி விக்கெட்டுகளை குறி வைத்திருக்கலாம். வேகப்பந்துவீச்சையே எதிர்கொண்டு பழக்கப்பட்ட வீரர்களுக்கு, சுழற்பந்துவீச்சை கொடுத்து சரிக்கட்டி இருக்கலாம். ஆனால் ஹர்திக் செய்த ஒரு நல்ல விசயம் என்னவென்றால், அர்ஷ்தீப் சிங் ஹாட்ரிக் சிக்சர் அடிக்க விட்டதும், உடனே ஹர்திக் பாண்டியா அவரிடம் சென்று அறிவுரை வழங்கினார். இதனை முன்பே செய்திருந்தால் சேதாரம் தவிர்க்கப்பட்டு இருக்கும்.


Click it and Unblock the Notifications