Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சாம்பியனுக்கு வந்த சோதனை.. குஜராத் அணியின் முன்னணி வீரர் விலகுவதாக தகவல்.. இனி என்ன செய்வது?

மும்பை: ஐபிஎல் சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு தொடக்கத்திலேயே பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அந்த அணியின் முதுகெலும்பாக பார்க்கக்கூடிய வீரர் விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ள ஐபிஎல் 2023ம் ஆண்டு தொடர் வரும் மார்ச் 31ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. மே 28ம் தேதி இறுதிப்போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து ரசிகர்களும் சிஎஸ்கே, ஆர்சிபி, மும்பை போன்ற அணிகள் கோப்பையை வெல்லும் என எதிர்பார்த்த சூழலில் திடீரென கடந்தாண்டு குஜராத் அணி கோப்பையை கைப்பற்றி ஆச்சரியம் ஏற்படுத்தியது.

குஜராத் அணிக்கு சிக்கல்

குஜராத் அணிக்கு சிக்கல்

எனவே சாம்பியனான குஜராத் அணிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் தான் இந்தாண்டும் முதல் லீக் போட்டி நடைபெறவுள்ளது. தோனியின் கடைசி வருடமாக பார்க்கப்படுவதால் வெற்றியுடன் தொடங்க சிஎஸ்கேவும், விட்ட இடத்தில் இருந்து வெற்றியுடன் தொடங்க குஜராத் அணியும் தீவிர முனைப்பு காட்டும். இந்நிலையில் தான் குஜராத் அணிக்கு சிக்கல் உண்டாகியுள்ளது.

என்ன பிரச்சினை

என்ன பிரச்சினை

குஜராத் அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளரான ஜோஸ் லிட்டில் தொடரில் இருந்து விலகலாம் எனத் தெரிகிறது. அயர்லாந்தை சேர்ந்த முன்னணி வீரரான இவரை கடந்த ஏலத்தின் போது ரூ.4.4 கோடி கொடுத்து குஜராத் அணி வாங்கியது. கடந்த 2016ம் ஆண்டு அறிமுகமாகி குறுகிய காலத்திலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். குறிப்பாக 2019ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக 4 - 45 என அட்டகாசமாக செயல்பட்டார்.

ரெக்கார்ட்

ரெக்கார்ட்

இதுவரை 53 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ஜோஸ் லிட்டில் 62 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். அவரின் எகானமி வெறும் 7.66 ரன்கள் தான். சராசரியாக 23 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை எடுத்து விடுகிறார். இந்திய களத்தில் லிட்டிலின் பந்துவீச்சு பொறுத்தமாக இருக்கும் என்பதால் அவரை குறிவைத்தார் ஆஷிஸ் நெஹ்ரா.

என்ன காயம்

என்ன காயம்

தற்போது பாகிஸ்தான் சூப்பர் லீக் சுற்றில் விளையாடி வந்தார். அப்போது தசைப்பிடிப்பு ஏற்படுவதாக அடிக்கடி கூறியதால் உடனடியாக தாய் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். சிகிச்சை பெற்று குணமடைய நாட்கள் எடுத்துக்கொள்ளும் என்பதால் பிஎஸ்எல் தொடரில் இருந்து விலகியுள்ளார். இதே நிலைமை தான் அடுத்த மாதம் தொடங்கும் ஐபிஎல்-க்கும் வரும். அல்லது முதல் பாதி போட்டிகளை தவறவிடலாம்.

Story first published: Sunday, February 26, 2023, 10:03 [IST]
Other articles published on Feb 26, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+