Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆர்சிபிக்கு ஆரம்பமே அடி.. பவுலிங்கில் இருந்த முக்கிய புள்ளி விளையாடுவது சந்தேகம்.. என்ன ஆனது?

மும்பை: ஐபிஎல் தொடருக்கான பணிகள் அதிவேகமாக நடந்து வரும் சூழலில் ஆர்சிபி அணிக்கு பெரும் அடி விழுந்துள்ளது. பவுலிங்கில் மிக முக்கிய தூணாக இருக்கும் ஜோஸ் ஹாசல்வுட் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இவை முடிந்தவுடனேயே ஐபிஎல் தொடரின் மீதான மோகம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு வந்துவிடும்.

நடப்பாண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 31ம் தேதி முதல் தொடங்கி மே 28ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்கான போட்டி அட்டவணைகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. அதன்படி அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.

ஆர்சிபி அணி

ஆர்சிபி அணி

புதிததாக வந்த குஜராத் டைட்டன்ஸ் அணி தனது முதல் சீசனிலேயே கோப்பையை வென்றுவிட்டது. ஆனால் ஐபிஎல் தொடங்கியது முதல் விளையாடி வரும் ஆர்சிபி இந்த முறையாவது கோப்பையை வெல்ல வேண்டும் என்ற நெருக்கடி உள்ளது. இதற்காக தான் விராட் கோலியிடம் இருந்த கேப்டன்சி டூப்ளசிஸிடம் சென்றது. இந்தமுறை கோலியும் தரமான ஃபார்மில் இருப்பதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

பவுலிங்கில் பின்னடைவு

பவுலிங்கில் பின்னடைவு

இந்நிலையில் பந்துவீச்சு துறையில் பெரும அடி விழுந்துள்ளது. ஆர்சிபியின் முக்கிய வேகப்பந்துவீச்சாளரான ஜோஸ் ஹாசல்வுட் காயத்தினால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவுடனான டெஸ்ட் தொடருக்கு தேர்வான அவர், ஒரு போட்டியில் கூட ஆடாமல் தாய் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். அவரின் காயம் குணமடைய சற்று காலம் எடுக்கும் என்பதால் ஐபிஎல்-ன் முதல் பாதியில் அவர் விளையாடுவது சந்தேகம் தான் எனக்கூறப்பட்டுள்ளது.

இவ்வளவு முக்கியம் ஏன்?

இவ்வளவு முக்கியம் ஏன்?

ஆர்சிபிக்கு கடந்த காலங்களில் பவுலிங் தான் பலவீனமே. ஆனால் கடந்தாண்டு (2021 ) ஜோஸ் ஹாசல்வு பவர் ப்ளே ஓவர்களில் அட்டகாசமாக விக்கெட் எடுத்தார். கடந்த சீசனில் மட்டும் 20 விக்கெட்களை அள்ளினார். இதே போல டெத் ஓவர்களிலும் அவரின் எகானமி 7 ரன்களுக்கும் குறைவாகவே இருந்துள்ளன. இதனால் ஆர்சிபியின் பவுலிங்கில் மிகப்பெரிய சொத்தாக ஹாசல்வுட் தான் இருக்கிறார். ஆனால் அவருக்கே காயம் ஏற்பட்டிருப்பதால் ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.

நற்செய்தி

நற்செய்தி

இது ஒருபுறம் இருக்க, அதிரடி நாயகன் க்ளென் மேக்ஸ்வெல் ஐபிஎல்-க்கு வந்துவிடுவார் எனத்தகவல் வெளியாகியுள்ளது. காலில் ஏற்பட்ட முறிவு காரணமாக நீண்ட நாட்களாக ஓய்வில் இருந்த அவருக்கு இந்தியாவுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் வாய்ப்பு கொடுத்துள்ளனர். அதில் விளையாடி ஃபார்மை சிறப்பாக்கிவிட்டால், நிச்சயம் ஐபிஎல்-ல் கலக்குவார் என்பதில் சந்தேகமே இல்லை.

Story first published: Friday, February 24, 2023, 14:18 [IST]
Other articles published on Feb 24, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+