Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய அணியில் அதிரடி மாற்றம்.. தொடக்க வீரராக இவரா? சூப்பர் முடிவை எடுத்த ஹர்திக்.. மழை குறுக்கீடு

மவுண்ட் மவுங்குனி : இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி இன்று தொடங்குகிறது. முதல் ஆட்டம் ரத்தான நிலையில் இரண்டாவது போட்டியிலும் மழை விளையாடும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், தற்போது மழை நின்று வானம் மேகமுட்டத்துடன் காணப்படுகிறது. இதனால் திட்டமிட்டப்படி டாஸ் 11.30 மணிக்கு போடப்பட்டது.

இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

 பந்துவீச்சு

பந்துவீச்சு

இன்றைய ஆட்டத்தில் இந்திய அணியை பொறுத்தவரையில் தொடக்க வீரராக ரிஷப் பண்ட் களமிறங்குகிறார். அவருக்கு ஜோடியாக இஷான் கிஷனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. . நடுவரிசையில் சூரிய குமார் யாதவ் , ஹர்திக் பாண்டியா ,ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் உள்ளனர். இதனால் சஞ்சு சாம்சன் இன்றைய ஆட்டத்தில் பிளேயிங் லெவனில் இடம்பெறவில்லை.

பந்துவீச்சு

பந்துவீச்சு

மைதானத்தில் வேகப்பந்துவீச்சாளரை விட சுழற் பந்துவீச்சாளர்களே குறைவான ரன்களை விட்டுக் கொடுத்துள்ளனர். இதனால் இன்றைய ஆட்டத்தில் சாஹல், வாசிங்டன் சுந்தர், தீபக் ஹூடா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். வேகப்பந்துவீச்சாளராக ஆர்ஸ்தீப், முகமது சிராஜ் மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உம்ரான் மாலிக்கிற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

மைதானம்

மைதானம்

இந்த மைதானம் ரன் குவிப்புக்கு சாதகமானது. இங்கு நடைபெற்ற சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் சராசரியாக முதல் இன்னிங்ஸில் 199 ரன்கள் குவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.இதனால், இரண்டாவது பேட்டிங் செய்யும் அணி எளிதாக சேஸிங் செய்து வெற்றி பெறும். மேலும் மழை குறுக்கீட்டால் டக்வொர்த் லூயிஸ் விதி வர வாய்ப்புள்ளது. இதனால் தான் வில்லியம்சன், முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனால் இந்திய அணி 200 ரன்களுக்கு மேல் குவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

பிளயிங் லெவன்

பிளயிங் லெவன்

1, இஷான் கிஷன், 2, ரிஷப் பண்ட், 3, ஸ்ரேயாஸ் ஐயர், 4, சூர்யகுமார் யாதவ், 5, ஹர்திக் பாண்டியா, 6, தீபக் ஹூடா , 7, வாசிங்டன் சுந்தர், 8, சாஹல், 9, புவனேஸ்வர் குமார், 10, முகமது சிராஜ், 11, ஆர்ஸ்தீப் சிங்

Story first published: Sunday, November 20, 2022, 12:13 [IST]
Other articles published on Nov 20, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+