சென்னை: பிக்பாஸ் பிரபலமும், நடிகையுமான சம்யுக்தா சிஎஸ்கே முன்னாள் கிரிக்கெட் வீரர் அனிருதா ஸ்ரீகாந்தை திருமணம் செய்துள்ளார். சென்னையில் இந்த விழா எளிமையான முறையில் நடந்தது.இந்த திருமண நிகழ்வில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டனர்.
சம்யுக்தா, ஸ்ரீகாந்த் இணைந்து தீபாவளியின் போது ஒரு புகைப்படம் எடுத்து கொண்டனர். அப்போதிலிருந்து இருவரும் திருமணம் செய்து கொள்ள போவதாக செய்திகள் வெளியானது. இது குறித்து நமது கைக்கேல் தமிழ் தளத்திலும் செய்திகள் வெளியிட்டோம்.

தற்போது இது உண்மையாக மாறி இருக்கிறது. இதன் மூலம் கிரிக்கெட் களத்தில் நடப்பது மட்டுமல்ல, கிரிக்கெட்டை சுற்றி நடக்கும் விசயங்களையும் தெளிவாக சொல்லும் ஒரே தளமாக தமிழில் மைக்கேல் விளங்குகிறது.
சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் திருமணப் படங்களில் சம்யுக்தா தங்க நிற புடவையிலும், அனிருதா தங்க நிற சட்டை, வேட்டியிலும் காட்சியளித்தனர். நகைகள் அணிந்து சம்யுக்தா பார்ப்பதற்கு தேவதை போல் இருந்தார். இந்தப் படங்கள் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன.
27.11.2025 என்ற தேதியுடன் மோதிரம் மற்றும் இதய ஈமோஜிகளைப் பதிவிட்டு, சம்யுக்தா மற்றும் அனிருதா இருவரும் தங்கள் திருமணப் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளனர். மேலும், குடும்ப உறுப்பினர்கள், சம்யுக்தாவின் மகன் மற்றும் நெருங்கிய நண்பர்களுடன் உணர்வுபூர்வமான தருணங்கள் அடங்கிய ஒரு வீடியோவையும் வெளியிட்டனர்.
இந்த திருமணம் இருவரின் வாழ்க்கையிலும் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கி இருக்கிறது. கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்தின் மகனான அனிருதா, முன்பு மாடல் ஆர்த்தி வெங்கடேஷை 2012ஆம் ஆண்டு மணந்தார். இந்த இரண்டு வருட திருமண பந்தம் விவாகரத்தில் முடிந்தது.
சம்யுக்தாவின் முதல் திருமணம் தொழில் அதிபர் கார்த்திக் சங்கருடன் நடந்தது. இந்தத் தம்பதியினர் 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் விவாகரத்து செய்தனர். தனது கணவரின் கள்ள உறவை அறிந்த பிறகு தனது திருமண உறவு முடிவுக்கு வந்ததாகவும், "என் முழு வாழ்க்கையும் ஒரு பொய்" என்று உணர்ந்ததாகவும் சம்யுக்தா ஒரு பேட்டியில் தெரிவித்தார்.திருமண வாழ்க்கையில் 2வது இன்னிங்சை தொடங்கியுள்ள இந்த ஸ்டார் தம்பதிகளுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.