அஸ்வின் செய்த தவறு.. முதல் நாளில் விக்கெட் விழாதற்கு காரணம் இது தான்.. திருத்தி கொள்வாரா?
இந்தூர் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா பின் தங்கியதற்கு மொத்தம் இரண்டு காரணங்கள் இருக்கிறது. ஒன்று இந்திய அணியின் பேட்டிங் சொதப்பல்.
இன்னொன்று அஸ்வின் தனது வழக்கமான பந்துவீச்சை வெளிப்படுத்தாதது. இந்தியா தங்களது முதல் வின்னிங்சில் விளையாடும் போது ஆடுகளம் நன்றாக சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக செயல்பட்டது.
இதனால் 109 ரன்களில் இந்தியா ஆட்டம் இழந்தது. இதனை அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியும் தடுமாறும் என எதிர்பார்க்கப்பட்டது.

விக்கெட் இல்லை
இந்த நிலையில் பந்து திடீரென்று திரும்புவது நின்று விட்டது. இதனால் ஆஸ்திரேலிய வீரர்கள் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 156 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து விளையாடுகின்றனர்.
இது இந்தியாவை விட 47 ரன்கள் கூடுதலாகும். முதல் நாள் ஆட்டம் அஸ்வினுக்கு சாதகமாக அமையவில்லை. அஸ்வின் 16 ஓவர் வீசி 40 ரன்கள் விட்டுக் கொடுத்துள்ளார். இதில் எந்த விக்கெட்டும் அவர் வீழ்த்தவில்லை.

அஸ்வின் தவறு
அஸ்வினுக்கு விக்கெட் கிடைத்திருக்கும். ஆனால் நடுவர் அதற்கு அவுட் கொடுக்கவில்லை. ரோகித் சர்மாவும் டி ஆர் எஸ் ஐ எடுக்க வில்லை. இந்த நிலையில் அஸ்வின் மட்டும் தனது மேஜிக்கை வெளிப்படுத்தி இருந்தால் ஆஸ்திரேலியா அணியும் சரிந்திருக்கும். அஸ்வின் என்ன தவறு செய்தார் என்பதை தற்போது பார்க்கலாம். அஸ்வின் விக்கெட்டை வீழ்த்த வேண்டும் என்று வித்தியாசமாக செயல்பட்டார். ஆடுகளத்தில் பந்து திரும்பியதை முதலில் இன்னிங்ஸில் அஸ்வின் கவனத்திருப்பார்.

வித்தியாசமான பந்துகள்
இதனால் நாமும் பந்தை திருப்பி விக்கெட் எடுக்க வேண்டும் என அஸ்வின் முடிவெடுத்தார். எனினும் பந்து எதிர்பார்த்தபடி திரும்ப வில்லை. இதனால் குழம்பி அஸ்வின் பந்தை திருப்புவதிலேயே கவனம் செலுத்தி, ஒவ்வொரு பந்தையும் வித்தியாசமாக வீசத் தொடங்கி விட்டார். இதனால் பேட்ஸ்மேன்கள் நெருக்கடி எதுவும் இன்றி சிங்கிள்ஸ் ஆடி அவரை எளிதாக எதிர் கொண்டு விட்டனர். மேலும் இந்தியாவின் ஸ்கோர் மிகவும் குறைவு என்பதால் அஸ்வின் கொஞ்சம் பதற்றமாக செயல்பட்டார்.

நெருக்கடி
நாளை அஸ்வின் சாந்தமாக எப்போதும் போல் நெருக்கடியை உண்டாக்கி பந்தை ஒரே லைனில் வீசினால், நிச்சயம் அவருக்கு விக்கெட் கிடைக்கும். எப்போதும் அஸ்வின் பேட்ஸ்மேனுக்கு வலையை விரித்து அதில் சிக்க வைப்பார். பேட்ஸ்மேனுடன் மைண்ட் கேம் விளையாடுவார். இதனால் இரண்டாம் நாள் ஆட்டத்தில் அஸ்வின் விக்கெட் வேண்டும் என்று தொடர்ந்து பந்தை வித்தியாசமாக வீசாமல் பேட்ஸ்மேன்களுக்கு செக் வைக்கும் வகையில் செயல்பட்டாலே அவருக்கு விக்கெட் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications