Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

81 வயதிலும் ரிட்டையர்ட் ஆகாத ஆஸ்திரேலிய வீரர்!

டெல்லி: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களான பில் லாரி மற்றும் இயன் சாப்பல் ஆகியோரின் குரல் தொடர்ந்து ஒலிக்க உள்ளது. 81 வயதாகும் லாரி மற்றும் 74 வயதாகும் சாப்பல் வர்ணனையில் இருந்து ஓய்வு பெறப் போவதில்லை என்று கூறியுள்ளனர்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்காக விளையாடிய பில் லாரி மற்றும் இயன் சாப்பல் ஆகியோர், ஆஸ்திரேலியாவின் சேனல் நைனின் நிரந்தர வர்ணனையாளர்கள்.

Bill lawry to continue with channel nine

அவர்கள் கிரிக்கெட் விளையாடியது மிகவும் குறைந்த காலமே. ஆனால், 40 ஆண்டுகளாக வர்ணனை செய்து வருகின்றனர். ஆஸ்திரேலியாவில் கோடைகாலத்தில் நடக்கும் போட்டிகள், அவர்களுடைய குரலை கேட்காமல் சுவாரசியம் இருக்காது.

கடந்த, 40 ஆண்டுகளாக சேனல் நைன், ஆஸ்திரேலியா பங்கேற்கும் போட்டிகளை ஒலிபரப்பும் உரிமை பெற்றிருந்தது. இந்த நிலையில், பாக்ஸ் ஸ்போர்ட்ஸ் மற்றும் செவன் நெட்வொர்க்ஸ் தற்போது அந்த உரிமையை பெற்றுள்ளன.

தங்களுக்காக வர்ணனை செய்யும்படி லாரி மற்றும் சாப்பலை அந்த டிவிக்கள் கேட்டுக் கொண்டன. ஆனால், 40 ஆண்டுகால உறவை துண்டிக்க இருவரும் மறுத்து விட்டனர்.

அதையடுத்து சேனல் நைனின், வைட் வோர்ல்ட் ஆப் ஸ்போர்ட்ஸ் இணையதளத்தில் தொடர்ந்து வர்ணனை செய்யும் ஒப்பந்தத்தை அவர்களுடன் சேனல் நைன் செய்துள்ளது.

தற்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணம் இல்லை என்று இருவரும் கூறியுள்ளனர்.

Story first published: Wednesday, May 30, 2018, 18:31 [IST]
Other articles published on May 30, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+