Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

துவண்டு கிடக்கும் இந்திய அணியை தூக்கி நிறுத்துவார் ஸ்டூவர்ட் பின்னி: கவாஸ்கர் கருத்து

மும்பை: ஸ்டூவர்ட் பின்னி வருகையால் இந்திய அணிக்கு பேலன்ஸ் கிடைக்கும் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். கொழும்பு மைதானம், வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான பிட்சை கொண்டிருப்பதை சுட்டிக்காட்டும் சுனில் கவாஸ்கர் பின்னி நல்ல ஆல்-ரவுண்டராக செயல்பட முடியும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கிறார்.

அதிர்ச்சி தோல்வி

அதிர்ச்சி தோல்வி

இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து விளையாடிவரும் இந்திய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் போட்டிகளில் ஆடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 63 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்தது. இந்நிலையில் கொழும்பு ஓவல் மைதானத்தில் இன்று 2வது டெஸ்ட் போட்டி தொடங்கியுள்ளது.

பின்னிக்கு வாய்ப்பு

பின்னிக்கு வாய்ப்பு

இந்த டெஸ்ட் தொடரில் இருந்து காயத்தால் ஷிகர் தவான் விலகிய நிலையில் ஸ்டூவர்ட் பின்னி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும், ஹர்பஜனுக்கு பதிலாக பின்னிக்கு 2வது டெஸ்ட்டில் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதுகுறித்து முன்னாள் ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

பேட்டிங் பிட்ச்

பேட்டிங் பிட்ச்

கவாஸ்கர் கூறியதாவது: கொழும்பு பிட்ச், பேட்டிங்கிற்கு சாதகமான பிட்ச். முதல் நாளில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாகவும், பிறகு முதல் அரை மணி நேரம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாகவும் பிட்ச் அமைந்துள்ளது.

பவுலர்

பவுலர்

ஸ்டூவர்ட் பின்னி, பிற முன்னணி பவுலர்களுக்கு சற்று ஓய்வை அளிக்க கூடியவர். அதேநேரம் 3 வேகப்பந்து வீச்சாளர்கள் தேவை என்றால், வருண் ஆரோன், இஷாந்த் ஷர்மா ஆகியோருடன் புவனேஷ்வர் குமாரை சேர்த்துக்கொள்ளலாம். அவர் பந்தை ஸ்விங் செய்வார்.

கோஹ்லி பேட்டிங்

கோஹ்லி பேட்டிங்

கேப்டன் என்பவர் பிற வீரர்களுக்கு உந்து சக்தியாக இருக்க வேண்டும். எனவே, விராட் கோஹ்லி, 3வது பேட்ஸ்மேனாக களமிறங்க வேண்டும். 4வது பேட்ஸ்மேனாக களமிறங்கும் கோஹ்லி, காலே டெஸ்டில் 5வதாக இறங்கியது தவறானது. இவ்வாறு கவாஸ்கர் தெரிவித்தார்.

Story first published: Thursday, August 20, 2015, 14:36 [IST]
Other articles published on Aug 20, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+