கீப்பிங்ல நாங்க டோணிக்கே டஃப் கொடுப்போம்.. வித்தியாசமான கீப்பிங்கால் கலாய் வாங்கிய ஆஸி. வீரர்
பிரிஸ்போர்ன்: ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் ஒருவரின் வித்தியாசமான கீப்பிங் ஸ்டைல் காரணமாக அனைவரும் அவரை கலாய்த்து வருகின்றனர். பிரிஸ்போர்னில் நடந்து வரும் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்த சம்பவம் நடந்து இருக்கிறது.
எப்போது போல இந்த வருடமும் ஆஸ்திரேலியா இங்கிலாந்து மோதும் ஆஷஸ் தொடர் ஆரம்பத்திலேயே வைரல் ஆக தொடங்கி இருக்கிறது. அதற்கு முதல் பலிகடாவாக ஆஸ்திரேலிய கீப்பர் 'டிம் பெயின்' ஆகியிருக்கிறார்.
இவரது மோசமான ஒரு விக்கெட் கீப்பிங் காரணமாக இங்கிலாந்து ஊடகங்கள் தொடங்கி நெட்டிசன்கள் வரை பலரும் அவரை கலாய்த்து வருகின்றனர்.
என்ன கீப்பிங் பாஸ் இது
ஆஸ்திரேலியாவுக்கு இங்கிலாந்துக்கும் இடையில் தற்போது ஆஷஸ் டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. ஆஸ்திரேலிய வீரர் டிம் பெயின் இதில் மிகவும் மோசமான விக்கெட் கீப்பிங் ஒன்றை செய்து இருக்கிறார். மிகவும் எளிதாக வந்த கேட்ச் ஒன்றை தவறவிட்டு இருக்கிறார். மேலும் அப்போது அவர் கையில் இருந்து முகம் வரை அத்தனையும் வித்தியாசமான கோணங்களில் மாறியிருக்கிறது. இது அத்தனையும் வீடியோவில் பதிவானதால் அவர் வைரல் ஆகியுள்ளார்.
என தலையை பாத்தியா
இந்த நிலையில் இவரது கீப்பிங் குறித்து கலாய்த்து இவர் இப்படி எழுதி இருக்கிறார். அதில் ''டிம் ஒரு கைல கூட பந்தை பிடிச்சு விக்கெட் எடுப்பார்'' என்று காமெடியாக கூறியிருக்கிறார். டிம் பெயினை அணியில் இருந்து நீக்குவது குறித்து பல காலமாக ஆலோசனை நடந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
ஓ இவர்தான் பெஸ்ட்டா
ஆஸ்திரேலிய அணிக்கு டிம் தேர்வு செய்யப்பட்டதில் இருந்தே பலரும் அதற்கு எதிரான கருத்து தெரிவித்து வந்தனர். இதற்காக ஆஸ்திரேலிய தேர்வு வாரியம் டிம் தான் ஆஸ்திரேலியாவிலேயே மிகவும் திறமையான விக்கெட் கீப்பர் என்று பதில் அளித்து இருந்தது. இந்த நிலையில் ''ஓ இவர்தான் ஆஸ்திரேலியாவில் பெஸ்ட் விக்கெட் கீப்பரா'' என்று இந்த நபர் கேள்வி கேட்டு இருக்கிறார்.
அடுத்த போட்டியில் இருக்க மாட்டார்
ஆஷஸ் தொடர் எப்பவுமே மிகவும் திரில்லாக செல்லும் தொடர் என்பதால் மிகவும் திறமியான வீரர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த நிலையில் இப்படி கேட்ச்சை விட்ட டிம் கண்டிப்பாக அடுத்த போட்டியில் விளையாடமாட்டார் என்று இவர் கூறி இருக்கிறார்.


Click it and Unblock the Notifications