Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கையில வச்சுருந்த பேட்ட காணோமே!!! இப்படி ஒரு ஹிட் விக்கெட்ட பார்த்து இருக்கீங்களா?

சிட்னி : கிரிக்கெட் ஆஸ்திரேலியா வெளியிட்டுள்ள ஒரு ஹிட் விக்கெட் வீடியோ ட்விட்டரில் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது. ஹிட் விக்கெட் ஆன பின் அந்த வீரர் கொடுக்கும் ரியாக்க்ஷனும் வேடிக்கையாக உள்ளது.

ஆஸ்திரேலியாவில் NPS என்ற அணிக்கும், விக்டோரியா அணிக்கும் பயிற்சிப் போட்டி நடைபெற்றது. அதில் ஜேக் வெதரால்ட் என்ற பேட்ஸ்மேன் தான் ஹிட் விக்கெட் ஆகி உள்ளார்.

Bizarre Hit wicket video of Jake Weatherald posted by Cricket Australia in a practice match

அந்த சம்பவத்தில், வேகமாக வரும் பந்தை டிரைவ் அடிக்க முயல்கிறார் வெதரால்ட். ஆனால், பந்து எட்ஜ் ஆகி செல்கிறது. அதே சமயம், பேட் பிடிப்பு விலகி வெதரால்ட் கையில் இருந்து பேட் மேலே சென்று, அவரின் தலையை சுற்றி பின் புறம் இருந்த ஸ்டம்ப்களின் மீது பட்டு ஹிட் விக்கெட் ஆனார்.

இது போன்ற மோசமான ஹிட் விக்கெட்கள் எப்போதாவது தான் நடக்கும். அதிலும், இது பார்க்க வேடிக்கையான ஒன்றாக இருந்தது, அதிலும், அவுட் ஆன பிறகு வெதரால்ட் கையை வில் வைத்து கொடுக்கும் ரியாக்ஷனும் வேடிக்கையாக இருந்தது. கீழே உள்ள ட்விட்டர் பக்கத்தில் அந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

இதே மைதானத்தில், மற்றொரு ஹிட் விக்கெட் சம்பவம் இதே போல் நடந்ததாக மற்றொரு கிரிக்கெட் அணி ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளது.

இடம் தான் சரியில்லையோ?

Story first published: Wednesday, September 5, 2018, 11:58 [IST]
Other articles published on Sep 5, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+