அமித்ஷாவின் மகனுக்கு பாஜகவில் எழுந்த எதிர்ப்பு.. கொஞ்சம் கூட எதிர்பார்க்கல..பாக்.அணியால் வந்த தலைவலி
அகமதாபாத் : உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் அணியினர் தற்போது அகமதாபாத்திற்கு வந்திருக்கிறார்கள்.
இந்த உலகக் கோப்பையிலே மிகவும் மிகப்பெரிய ஆட்டம் என்றால் இந்தியாவும் பாகிஸ்தானும் வரும் 14ஆம் தேதி மோதும் ஆட்டம் தான். இந்த போட்டியை காண ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.

அதற்காக அகமதாபாத்தில் உள்ள உணவகங்கள், ஹோட்டல் விடுதிகள், மருத்துவ அறைகள் கொண்டு அனைத்தும் ஹவுஸ்புல் ஆகிவிட்டது. இந்த நிலையில் அகமதாபாத் வந்த பாகிஸ்தான் வீரர்களுக்கு பிசிசிஐ சார்பாக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வெள்ளை துண்டு போர்த்தி நடன நிகழ்ச்சிகளுடன் பாகிஸ்தான் வீரர்களை இந்தியா வரவேற்று இருக்கிறது.
இந்த நிலையில் இது பாஜகவின் ஒரு தரப்பினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. எதிரி நாடாக கருதப்படும் பாகிஸ்தானுக்கு இத்தகைய வரவேற்பை அளித்திருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என பாஜகவின் ஒரு தரப்பினர் சமூக வலைத்தளத்தில் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
அமித்ஷாவின் மகனாக இருந்து கொண்டு ஜெய்ஷா இவ்வாறு செய்யலாமா என்றும் பாஜகவினர் கேள்வி எழுப்பி வருகிறார்கள். தினம்தோறும் காஷ்மீரில் தீவிரவாதிகளால் ராணுவ வீரர்கள் கொல்லப்படும் நிலையில் பாகிஸ்தான் உடன் கிரிக்கெட்டே விளையாட கூடாது என தாங்கள் கூறிவரும் நிலையில் தற்போது இந்தியாவில் பாகிஸ்தானுக்கு உற்சாக வரவேற்பு வழங்கி வருவது எந்த வகையில் நியாயம் என்று அவர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
ஜெய்ஷாவின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பலரும் சமூக வலைத்தளத்தில் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அகமதாபாத்தில் விளையாடுவதற்கு தயக்கம் காட்டி வந்த நிலையில் தற்போது அதற்கு ஏற்றார் போல் பாஜகவினர் பாகிஸ்தானுக்கு சிறப்பு வரவேற்பு வழங்கியதை எதிர்த்து வருகிறார்கள். இந்த நிலையில் பாகிஸ்தான் வீரர்களுக்காக தனியே 5000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications