For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இறுதிப் போட்டிக்காக ஆஸ்திரேலியா போய் தோற்றுத் திரும்பிய நியூசிலாந்துக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு

ஆக்லாந்து: உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்காக ஆஸ்திரேலியாவுக்குப் போய், அங்கு ஆஸ்திரேலியாவிடம் தோல்வியைத் தழுவி திரும்பிய நியூசிலாந்து அணிக்கு அந்த நாட்டு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

முதல் முறையாக உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற அணி நியூசிலாந்து. இறுதிப் போட்டியில் அந்த அணி ஆஸ்திரேலியாவிடம் பெரும் தோல்வியைச் சந்தித்து விட்டது.

அரை இறுதிப் போட்டி வரை தனது நாட்டிலேயே விளையாடி வந்தது நியூசிலாந்து. இதனால் பெரும் வெற்றிகளும் அந்த அணிக்கு கை கூடின. இறுதிப் போட்டிக்கு மட்டுமே அது ஆஸ்திரேலியா செல்ல வேண்டி வந்தது. அங்கு அதற்கு தோல்வியே கிடைத்தது.

முதன்முறையாக...

முதன்முறையாக...

தோல்வி அடைந்தாலும் கூட, முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு நியூசிலாந்து தகுதி பெற்றதால் அந்த நாட்டு ரசிகர்கள் பெரும் உற்சாகத்துடன் உள்ளனர்.

உற்சாக வரவேற்பு...

உற்சாக வரவேற்பு...

இந்த நிலையில் நேற்று நியூசிலாந்து அணியினர் நாடு திரும்பினர். ஆக்லாந்து வந்து சேர்ந்த அவர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

போட்டோவுக்கு போஸ்...

போட்டோவுக்கு போஸ்...

கேப்டன் மெக்கல்லம் உள்ளிட்ட அனைவருக்கும் ஹீரோ வரவேற்பு அளிக்கப்பட்டது. ரசிகர்களுக்கு மெக்கல்லம் நன்றி தெரிவித்துக் கொண்டார். போட்டோக்களுக்குப் போஸ் கொடுக்கவும் செய்தார்.

ரசிகர்கள் கூட்டம்...

ரசிகர்கள் கூட்டம்...

வீரர்களை வரவற்க நூற்றுக்கணக்கான ரசிகர்கள் ஆக்லாந்து விமான நிலையத்தில் கூடியிருந்தனர்.

செல்பி...

செல்பி...

கேப்டன் மெக்கல்லம் தனது இரு மகள்களையும் தோளிலும், இடுப்பிலும் தூக்கியபடி உற்சாகமாக காணப்பட்டார். அவருடன் ரசிகர்கள் செல்பி எடுத்துக் கொண்டனர்.

டேணியல்...

டேணியல்...

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ள டேணியல் வெட்டோரி உள்ளிட்டோர் உற்சாகத்துடன் காணப்பட்டனர்.

Story first published: Wednesday, April 1, 2015, 14:36 [IST]
Other articles published on Apr 1, 2015
English summary
The Black Caps have received a hero's welcome on their return to New Zealand after cricket fans gathered on Auckland's waterfront on Tuesday evening to catch a glimpse of the beaten, but proud, World Cup finalists. Speaking at an official presentation in The Cloud on Queens Wharf, Black Caps skipper Brendon McCullum said the team were amazed by the continued support of the New Zealand public.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X