
அபார பந்து வீச்சு
டிரென்ட் போல்ட் 17 ரன்களை மட்டுமே கொடுத்து 5 விக்கெட்களைச் சாய்த்தார். ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட் இழப்புக்கு 32 ரன்கள் என்ற பரிதாபமான நிலையில் இருந்தது.

மோசமான ஸ்கோர்
இதே ஸ்கோரில் அது தோற்றிருந்தால் 35 ரன்கள் எடுத்து வீழ்ந்து 2004ம் ஆண்டு இலங்கை அணி செய்திருந்த "சாதனையை" பாகிஸ்தான் முறியடித்திருக்கும் நிலை ஏற்பட்டிருக்கும்.

பட்டை நாமம்
முதல் இரு ஒரு நாள் போட்டிகளிலும் பாகிஸ்தான் தோற்றிருந்தது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 3-0 என்ற கணக்கில் நியூசிலாந்து தொடரை வென்றுள்ளது.

வில்லியம்சன் அபார பேட்டிங்
முன்னதாக நியூசிலாந்து தனது பேட்டிங்கின்போது கனே வில்லியம்சன் 73, டெய்லர் 52 எடுத்தனர். பாகிஸ்தான் தரப்பில் ரயீஸ் 3, ஹசன் அலி 3 விக்கெட்களைச் சாய்த்தனர்.


Click it and Unblock the Notifications