
மழை குறுக்ககீடு
போட்டியின் போது மழை குறுக்கிட்டது. அதன் பிறகு மீண்டும் போட்டி தொடங்கப்பட்டது. அந்த சில நிமிடக்ள் மட்டும் தான், சூர்யகுமார் யாதவ் அமைதியாக இருந்தார். மீண்டும் ஆட்டம் தொடங்கியதும், மழை நின்றாலும், சூர்யகுமார் யாதவின் சிக்சர் மழை பொழிய தொடங்கியது. மறுமுனையில், டி20 உலககோப்பையில் வாய்ப்பு கிடைக்காத ஸ்ரேயாஸ், இன்றைய ஆட்டத்தில் முதல் பந்திலேயே பவுண்டரி அடித்தார்.

அதிரடி ஆட்டம்
9 பந்துகளை எதிர் கொண்டு 13 ரன்கள் எடுத்த நிலையில், ஸ்ரேயாஸ் உரு தவறை செய்தார். ஒரு பவுண்டரையும் ,ஒரு சிக்சரும் அடித்த ஸ்ரேயாஸ் ஐயர் பேக் ஃபுட்டில் நின்று ஷாட் அடிக்க முயன்ற போது ஹிட் விக்கெட் ஆனார். எனினும் மறுமுனையில் வாண வேடிக்கை காட்டிய சூரியக்குமார் யாதவ் 32 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்தார். இதில் இரண்டு சிக்ஸர்களும் , ஐந்து பவுண்டரிகளும் அடங்கும்.

சூர்யகுமார் சதம்
ஹர்திக் பாண்டியா பேட்டிங்கில் முதலில் பொறுமை காத்தார். சொல்லப்போனால் நீ அடி, நான் இங்கு உனக்காக நிற்கிறேன் என்பது போல் ஹர்திக் ஒரு பக்கம் Mute Mode க்கு சென்றார். எனினும் மறுமுனையில் சூரியகுமார் யாதவ் 49 பந்துகளில் சதம் விளாசினார். இதில் ஏழு இமாலய சிக்சர்களும் 11 பவுண்டரிகளும் அடங்கும் . நடப்பாண்டில் சூரியகுமார் யாவும் விலாசியே இரண்டாவது சதம் இதுவாகும்.

ஹாட்ரிக் சாதனை
இதனால் இந்திய அணி 200 ரன்களுக்கு மேல் அடிக்கும் என எதிர்பார்த்த நிலையில், கடைசியில் ஒரு டிவிஸ்ட் நிகழ்ந்தது. சூர்யகுமார் எதிர்முனைக்கு செல்ல, ஹர்திக் பாண்டியா, தீபக் ஹூடா, வாசிங்டன் சுந்தர் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, டிம் சௌதி ஹாட்ரிக் சாதனையை நிகழ்த்தினார். இதன் முலும் இந்திய அணி 191 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்தது.


Click it and Unblock the Notifications











