For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பார்டர் கவாஸ்கர் கோப்பை- இந்தியாவுக்கு எமனே இந்த 3 ஆஸி. பவுலர்கள் தான்! சமாளிப்பாரா விராட் கோலி?

பெர்த் : பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்திய அணி தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆஸ்திரேலியாவுக்கு சென்று ஹாட்ரிக் சாதனையை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்தியாவின் இந்த கனவுக்கு எமனாக 3 ஆஸ்திரேலிய பவுலர்கள் இருக்கிறார்கள். அவர்கள் யார்? இந்த 3 வீரர்களையும் இந்தியா சமாளிக்குமா என்பதை தற்போது பார்க்கலாம்.

ஆஸ்திரேலிய அணியில் இருக்கும் மூன்று வேகப்பந்து வீச்சாளர்களான மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ், ஜோஸ் ஹேசல்வுட் என மூன்று வீரர்களுமே மீம்களில் வரும் மூன்று நெருப்புகளை கக்கும் டிராகன் போல் இருக்கிறார்கள். இதில் மிட்செல் ஸ்டார்க் அனுபவம் வாய்ந்த வீரராக இருக்கின்றார். 89 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கும் மிட்செல் ஸ்டார்க் 358 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.

border gavaskar trophy india vs australia test match vs

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் 62 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 269 விக்கெட்டுகளும், 70 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ஹேசல்வுட் 273 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருக்கிறார்கள். இதில் ஒரு காமெடி என்னவென்றால் இந்திய அணியில் இருக்கும் பும்ரா, சிராஜ்,ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா என 4 சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய வேகப் பந்துவீச்சாளர்கள் எடுத்த மொத்த டெஸ்ட் விக்கெட்டுகளையும் சேர்த்தால் கூட இந்த மூன்று வீரர்களும் தனியாக எடுத்த விக்கெட்டுகளின் எண்ணிக்கையை தொட முடியாது.

அந்த அளவுக்கு இந்த ஆஸ்திரேலியா வீரர்கள் மூன்று பேரும் அனுபவம் வாய்ந்த வீரராக இருக்கிறார்கள். குறிப்பாக ஸ்டார்க் ஆஸ்திரேலியாவில் 50 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 217 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இதில் இந்தியாவுக்கு எதிராக அவர் 18 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 48 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.ஹேசல்வுட் 39 டெஸ்ட் போட்டிகள் விளையாடி 162 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.

இந்தியாவுக்கு எதிராக 15 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 51 விக்கெட்டுகளை கைப்பற்றி அபாயகரமான வீரராக இருக்கின்றார். ஆஸ்திரேலியா பொறுத்தவரை அவர் 33 டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியாவில் விளையாடி 152 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். குறிப்பாக இந்தியாவுக்கு எதிராக 13 போட்டிகளில் விளையாடி 50 விக்கெட் வீழ்த்தி இருக்கிறார். இப்படி மூன்று வீரர்களுமே இந்தியாவுக்கு எதிராக அபாரமான ரெக்கார்டுகளை வைத்திருக்கிறார்கள்.

அதிலும் பாட் கம்மின்ஸ், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் 42 போட்டியில் விளையாடி 175 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இந்தத் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் அஸ்வின் முதல் இடத்திலும், நாதன் லயன் இரண்டாவது இடத்திலும், பாட் கம்மின்ஸ் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.

மூன்று வீரர்களுமே சர்வசாதாரணமாக 140 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசக்கூடியவர்கள். அதிலும் ஸ்டார்க், இடது கை வேகப்பந்து வீச்சாளர். அவருடைய பந்துவீச்சை எதிர்கொள்ளும் போது வலது கை பேட்ஸ்மேன்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஏனென்றால் எல் பி டபிள்யு, போல்ட் என இரண்டு வகை விக்கெட்டுகளும் இவர் அதிகம் எடுக்கக் கூடியவர். குறிப்பாக இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி,கில் ஆகியோர் இவருடைய பந்துவீச்சை பார்த்து தான் எதிர்கொள்ள வேண்டும்.

குறிப்பாக விராட் கோலி ஸ்டார்க்கிடம் நான்கு முறை ஆட்டம் இழந்து இருக்கிறார். இதற்கு அடுத்தபடியாக ஹேசல்வுட், பந்தை நன்றாக ஸ்விங் செய்யக் கூடியவர். 140 கிலோ மீட்டரில் வேகத்தில் ஸ்விங் ஆகும் பந்தை எதிர்கொள்வது என்பது முடியாத காரியம். இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி மூன்று முறை ஹேசல்வுட்டிடம் ஆட்டம் இழந்து இருக்கிறார்.

இந்த இரண்டு பவுலர்களை விட அதி பயங்கரமானவர் என்றால் அது பாட் கம்மின்ஸ் தான். . குறிப்பாக விராட் கோலி, பாட் கம்மின்ஸ்க்கு எதிராக தடுமாறி இருக்கிறார். இதுவரை டெஸ்டில் 12 இன்னிங்ஸில் கோலி மொத்தமாக கம்மின்ஸ்க்கு எதிராக 96 ரன்கள் தான் அடித்திருக்கிறார். இதில் ஐந்து முறை அவுட் ஆகி இருக்கின்றார். இதனால் இந்த மூன்று வீரர்களை சமாளித்து பேட்டிங் செய்வது என்பது கொஞ்சம் கடினமான காரியம் தான்.

Story first published: Thursday, November 21, 2024, 18:26 [IST]
Other articles published on Nov 21, 2024
English summary
Border Gavaskar Trophy 2024- 3 Australian Pace bowlers will be Danger for Team India பார்டர் கவாஸ்கர் கோப்பை- இந்தியாவுக்கு எமனே இந்த 3 ஆஸி. பவுலர்கள் தான்! சமாளிப்பாரா விராட் கோலி?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+