Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs AUS- இந்திய அணிக்கு பெரிய பின்னடைவு.. முக்கிய பவுலருக்கு காயம்.. மாற்று வீரர் அறிவிப்பு

மும்பை : இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் கவாஸ்கர் தொடர் வெள்ளிக்கிழமை இந்திய நேரப்படி காலை 7 50 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்த போட்டியில் பெர்த் ஆடுகளத்தில் நடைபெறுகிறது.

இந்த ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். இந்த டெஸ்ட் போட்டியில் தயாராக இந்திய அணி பயிற்சி முகாமில் பங்கேற்று இருக்கிறது. இதில் ஏற்கனவே இந்திய அணியின் நட்சத்திர வீரர் கில்லுக்கு கைவிரலில் காயம் ஏற்பட்டது.

border gavaskar trophy india vs australia test match vs

இதனால் அவர் முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டது. இந்த சூழலில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான கலீல் அகமதுக்கு காயம் ஏற்பட்டிருப்பது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை கொடுத்திருக்கிறது. ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் பங்கு மிகவும் முக்கியமாகும்.

இதனால் இந்திய அணி தங்களிடம் இருக்கும் இடது கை வேகப்பந்துவீச்சாளரை ஆஸ்திரேலிய தொடருக்காக நீண்ட காலமாக தயார் செய்து வந்தது. இதனால் தென் ஆப்பிரிக்கா தொடரில் இடம் பெற்றிருந்த கலில் அகமதை நேரடியாக இந்திய அணி நிர்வாகம் ஆஸ்திரேலியாவுக்கு வர வைத்தது. இந்த சூழலில் பயிற்சி செய்யும்போது கலில் அகமதுக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது.

இதனால் அவர் இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார். கலீல் அகமதை வைத்து தொடரின் பிற்பாதியில் ஆஸ்திரேலியாவுக்கு நெருக்கடி கொடுக்கலாம் என கம்பீர் போட்ட பிளான் இதன் மூலம் முடிவுக்கு வந்திருக்கிறது. இந்த நிலையில் கலீல் அகமதுக்கு மாற்று வீரராக தற்போது ஆர்சிபி அணிக்காக விளையாடிய இடது கை வேகப் பந்துவீச்சாளர் யாஷ் தயால் சேர்க்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனை அடுத்து யாஷ் தயால் உடனடியாக ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டு வர உள்ளார். யாஷ் தயாலுக்கு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பு குறைவு என்றாலும், ஆஸ்திரேலிய இடது கை வேகப்பந்துவீச்சாளர் ஸ்டார்க்கை எதிர்கொள்ள இந்திய வீரர்கள் பயிற்சி செய்ய வேண்டும். இதற்காகவே இடதுகை வேகப்பந்துவீச்சாளர் ஆன யாஷ் தயாலை பிசிசிஐ தேர்வு செய்திருக்கிறது.

Story first published: Thursday, November 21, 2024, 23:11 [IST]
Other articles published on Nov 21, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+