Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பார்டர் கவாஸ்கர் தொடர்: இந்திய அணியில் மிகப் பெரிய ட்விஸ்ட்.. கடைசி நேரத்தில் 29 வயது வீரருக்கு லக்

மும்பை : பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்திய ஆஸ்திரேலிய அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை காலை 7:50 மணிக்கு பெர்த் நகரில் தொடங்குகிறது. இந்த போட்டியில் பும்ரா கேப்டனாக செயல்பட போகிறார்.

ரோகித் சர்மா இந்த ஆட்டத்தில் பங்கேற்காத நிலையில் நட்சத்திர வீரர் கில்லும் காயம் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த சூழலில் இந்திய அணியில் பிளேயிங் லெவனின் கே எல் ராகுல் தான் தொடக்க வீரராக களமிறங்கப் போகிறார் என்று செய்திகள் வெளியானது.

border gavaskar trophy india vs australia test match vs

ஆனால் கடைசி நேரத்தில் இந்திய அணி நிர்வாகம் ஒரு மாற்றத்தை செய்திருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளியாகி உள்ளது. அதன்படி சகில் காயம் காரணமாக விளையாட நிலையில் ,அவருக்கு பதில் படிக்கல் சேர்க்கப்படுவார் என்று கூறப்பட்டது. ஆனால் படிக்கல்லை விட கேஎல் ராகுல் நம்பர் மூன்றாவது வீரராக நன்றாக செயல்பட வாய்ப்பு இருப்பதாக கூறி ராகுலை மூன்றாவது வீரராக இந்திய அணி களம் இறக்கப் போகிறது.

இதனால் தொடக்க வீரராக அபிமன்யு ஈஸ்வரன் விளையாட கூடும் என தெரிகிறது. இந்திய ஏ அணியில் களமிறங்கிய அபிமனியூ ஈஸ்வரன் நான்கு இன்னிங்ஸ்களை சேர்த்து மொத்தமே 36 ரன்கள் தான் அடித்து இருந்தார். ஆனால் அபிமன்யூ ஈஸ்வரன் ஒரு நல்ல டெஸ்ட் வீரராக தன்னுடைய திறமையை நிரூபித்து இருக்கிறார்.

இதனால் அபிமன்யு ஈஸ்வரனுக்கு தொடக்க வீரர் வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிகிறது. இதேபோன்று சர்பராஸ் கானுக்கு பதிலாக துருவ் ஜூரலுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெரிகிறது. வேகப்பந்துவீச்சை பொறுத்தவரை பயிற்சி ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட பிரசித் கிருஷ்ணாவுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

border gavaskar trophy india vs australia test match vs

இந்த நிலையில் அவருக்கு பதில் ஆகாஷ் தீப் தான் விளையாடப் போகிறார் என்றும் தெரிகிறது. இந்த நிலையில் நிதிஷ் குமார் என்ற ஆல் ரவுண்டருக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் சேர்க்க வேண்டும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு கிடைக்காது என்று கூறப்படுகிறது. இந்த சூழலில் பல ஆண்டுகளாக வாய்ப்புக்காக காத்திருந்த அபிமான ஈஸ்வரன் நாளை அறிமுகமாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Story first published: Thursday, November 21, 2024, 19:13 [IST]
Other articles published on Nov 21, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+