Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பயமா இருக்கு! போட்டிக்கு 12 மணி நேரத்திற்கு முன்பு ஆஸி.க்கு வார்னிங் கொடுத்த வார்னர்..என்ன நடந்தது?

மும்பை : இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வெள்ளிக்கிழமை காலை 7.50 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டி பெர்த் நகரில் நடைபெறுகிறது. இந்திய அணியில் நட்சத்திர வீரர் விராட் கோலி கடைசியாக பெர்த் மைதானத்தில் விளையாடிய போது சதம் அடித்தார்.

இதனால் பெர்த் அவருக்கு ராசியான மைதானமாக பார்க்கப்படுகிறது. எனினும் விராட் கோலி தற்போது பார்மில் இல்லாமல் இருப்பதால் அவரால் பழையபடி ரன்கள் சேர்க்க முடியுமா என்று எதிர்பார்ப்பு இருந்துள்ளது.

border gavaskar trophy india vs australia test match vs

இந்த நிலையில் போட்டி தொடங்க இன்னும் 12 மணி நேரமே உள்ள நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் டேவிட் வார்னர் தங்களது நாட்டு வீரர்களுக்கு ஒரு எச்சரிக்கை விடுத்திருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், விராட் கோலி ஆஸ்திரேலியாவுக்கு வெளியே விளையாடுவதை நினைத்து நான் கவலை கொள்ள மாட்டேன். ஆனால் விராட் கோலி ஆஸ்திரேலியாவின் விளையாடினால் நிச்சயமாக ஒரு ஆஸ்திரேலிய ரசிகனாக எனக்கு கவலை இருக்கும்.

ஏனென்றால் அவருடைய சராசரி 55 என்று அளவில் இருக்கின்றது. விராட் கோலி கடந்த சில போட்டிகளாக பேட்ஸ்மேனுக்கு பிடித்த ஆடுகளத்தில் விளையாடாமல் இருந்தார். ஆனால் தற்போது நல்ல ஒரு ஆடுகளத்தில் விராட் கோலி விளையாடப் போகிறார். இதனால்தான் எனக்கு கோலி, ரோஹித் சர்மா ஆகியோரை நினைத்து பயமாக இருக்கின்றது.

இந்த கோடைகாலத்தில் ஆஸ்திரேலியாவில் விராட் கோலி அதிக ரன்கள் குவிக்க வாய்ப்பு இருக்கின்றது. நான் எப்போதுமே கூறுவேன். விராட் கோலி போன்ற வீரர் ஃபார்ம் அவுட் ஆக மாட்டார்கள். அவர்களுக்கு தேவையான ரன்கள் தான் கிடைக்காமல் போகிறது.ஏனென்றால் விராட் கோலியின் திறமை அப்படியேதான் இருக்கின்றது. இதுபோன்ற பெரிய தொடர்களில் எப்படி ரன்கள் சேர்க்க வேண்டும் என்று விராட் கோலிக்கு நன்றாகவே தெரியும்.

ஏற்கனவே அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மிகப்பெரிய ஸ்கோரை அடித்திருக்கிறார். இதனால் விராட் கோலியை கண்டு ஆஸ்திரேலிய வீரர்கள் நிச்சயம் பயப்படுவார்கள் என நினைக்கின்றேன். விராட் கோலிக்கு இவ்வளவு மாஸ் ஆன வசனத்தை எல்லாம் எழுதியவர். இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணி நான்குக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வெற்றி பெறும் என கணித்திருக்கின்றார்..

Story first published: Thursday, November 21, 2024, 21:11 [IST]
Other articles published on Nov 21, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+