இந்தியா Vs ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்.. எந்த சேனலில் பார்ப்பது? ஆடுகளம், வானிலை அறிக்கை என்ன?
நாக்பூர் : இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. இந்தப் போட்டியில் எந்த மாதிரி ஆடுகளம் அமைக்கப்பட்டுள்ளது என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
இந்த நிலையில், இந்திய அணி தொடரை வெற்றியுடன் தொடங்கி ஆஸ்திரேலியாவுக்கு அழுத்தத்தை கொடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக தான் இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. ஆனால் பந்து முதல் நாளிலேயே சுழற்பந்துக்கு எடுபடுமா, இல்லை, 2வது அல்லது 3வது நாள் தான் மாறுமா என்நு தெரியவில்லை.

பிட்ச் ரிப்போர்ட்
ஆனால் ஆடுகளம் மிகவும் வறண்ட நிலையில் உள்ளதால் பந்து முதல் ஓவரிலேயே சுழன்று திரும்புவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், இதனை ஏற்காத டிராவிட், மைதானத்தை மாற்றுமாறு அறிவுறுத்தியுள்ளதாகவும், இதனால் கொஞ்சம் புற்கள் வளர வைக்க மைதான பராமரிப்பாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதல் 30 நிமிடம்
எனினும் இன்று மாலை தான் மைதானம் எப்படி தீர்மானிக்கப்படும் என்று தெரியும். இதே போன்று வானிலையை பொறுத்தவரை வறண்ட வானிலையே இருக்கும். எனினும் பிப்ரவரி மாதத்தில் இரவு பெய்யும் பனிப்பொழிவின் தாக்கம், ஆடுகளத்தை ஈரப்பதமாக வைத்து கொள்ளும். இதனால் முதல் அரைமணி நேரம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக ஆடுகளம் செயல்பட வாய்ப்புள்ளது.

வானிலை
ஆனால் பந்து ஸ்விங் ஆகும் வாய்ப்பு குறைவு. ஏனென்றால் ஈரப்பதம் அதிகம் இருக்கும் போது பந்து பெரிய அளவில் தனது வேலையை காட்டாது. ஆனால் பேட்டிங் செய்ய ஏதுவான சூழலாக இருக்காது. இதனால் ஆட்டத்தின் முதல் அரை மணி நேரம், இரு அணிகளுக்கும் முக்கியமாக கருதப்படும். இதே போன்று மழை என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதால் ஆட்டம் வானிலை மற்றும் போதிய வெளிச்சம் இன்மையால் பாதிக்கப்படாது.

எந்த சேனல்
பந்து கொஞ்சம் பவுன்ஸ் ஆகும் என்பதால் பந்து பேட்டிற்கு நன்றாக வரும். இதன் காரணமாக பேட்ஸ்மேன்களும் ரன் குவிக்க ஏதுவாக இருக்கும். இந்தப் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி ஒளிப்பரப்பு செய்கிறது. தமிழ் வர்ணனையும் உள்ளது. மேலும், ஓடிடியில் ஹாட் ஸ்டாரில் இந்தப் போட்டியை நேரலையில் பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications