Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs AUS - ஜியோ சினிமா கிடையாது.. முதல் டெஸ்ட் போட்டியை எந்த சேனலில், ஓடிடியில் பார்ப்பது ? நேரம்?

பெர்த் : நடப்பாண்டில் மிகப்பெரிய கிரிக்கெட் தொடராக கருதப்படும் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் தொடர் நாளை முதல் தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி நான்கு போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கும் தகுதி பெற முடியும்.

இந்த சூழலில் முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 22ஆம் தேதியும், இரண்டாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 6ஆம் தேதியும், மூன்றாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 14ஆம் தேதியும், நான்காவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 26 ஆம் தேதியும், ஐந்தாவது டெஸ்ட் போட்டி 2025 ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் தேதியும் தொடங்குகிறது.

border gavaskar trophy india vs australia test match vs

கடந்த இரண்டு முறை ஆஸ்திரேலியாவுக்கு சென்று இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றி இருப்பதால் இம்முறை ஹாட்ரிக் சாதனை படைக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மதியில் இருந்துள்ளது. இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனான ரோகித் சர்மா முதல் போட்டியில் பங்கேற்க மாட்டார். இதனால் அவருக்கு பதிலாக பும்ரா தான் அணியை தலைமை தாங்குகிறார்.

எனினும் ரோஹித் சர்மா இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன்பு ஆஸ்திரேலியாவுக்கு வந்துவிடுவார். இதேபோன்று கில் காயம் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை. இந்த நிலையில் முதல் டெஸ்ட் போட்டி சரியாக காலை 7:50 மணிக்கு இந்திய நேரப்படி தொடங்குகிறது. டாஸ் 7 :20 மணிக்கு வீசப்படும். வழக்கமாக இந்திய விளையாடும் போட்டிகள் அனைத்தும் ஜியோ சினிமாவிலும் ஸ்போர்ட்ஸ் 18 தொலைக்காட்சிகளிலும் மட்டுமே கண்டு காண முடியும்.

ஆனால் இந்த தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெறுவதால். இதற்கான ஒளிபரப்பு உரிமையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் டிஸ்னி ஹாட்ஸ்டார் வாங்கி இருக்கிறது. இதனால் இந்த போட்டியை டிஸ்னி ஹாட் ஸ்டார் ஓடிடியிலும், தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலிலும் கண்டுகளிகலாம் இந்த சூழலில் பெர்தில் நாளை காலை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் போட்டி தாமதமாக தொடங்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Thursday, November 21, 2024, 20:22 [IST]
Other articles published on Nov 21, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+