Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs AUS: மெகா சாதனை.. நம்பர் 1 இடத்தை பிடித்த பும்ரா.. 2024 இல் அதிக விக்கெட் வீழ்த்தி ரெக்கார்டு

பெர்த்: உலகின் முன்னணி வேகப் பந்துவீச்சாளரான பும்ரா ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் 2024 ஆம் ஆண்டில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்று இருக்கிறார்.

மேலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் ஒரே ஆண்டில் 50 விக்கெட்களை வீழ்த்தி மைல்கல் சாதனையை படைத்து இருக்கிறார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 150 ரன்கள் மட்டும் எடுத்தது.

ind vs aus border gavaskar trophy india vs australia test match vs

அடுத்து ஆடிய ஆஸ்திரேலிய அணி பும்ராவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. சிறப்பாக பந்து வீசிய பும்ரா 18 ஓவர்களில் 30 ரன்கள் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்கள் வீழ்த்தினார். ஆஸ்திரேலிய அணி 104 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 46 ரன்கள் முன்னிலை பெற்றது.

பும்ரா இதற்கு முக்கிய காரணமாக இருந்தார். அவர் 5 விக்கெட்கள் வீழ்த்தியதன் மூலம் 2023 - 25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் மட்டும் 50 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். மேலும் இந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக 61 விக்கெட்களை வீழ்த்தி 2024 ஆம் ஆண்டில் அதிக சர்வதேச விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்து இருக்கிறார்.

பும்ரா 18 போட்டிகளில் 61 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். இலங்கையின் வனிந்து அசரங்கா 28 போட்டிகளில் 60 விக்கெட்களை வீழ்த்தி இரண்டாவது இடத்தில் இருக்கிறார். மேலும், இந்த ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் மட்டும் 46 விக்கெட்களை வீழ்த்தி அஸ்வினுடன் இந்த ஆண்டு அதிக விக்கெட் வீழ்த்திய பந்து வீச்சாளர்கள் வரிசையில் முதல் இடத்தை பகிர்ந்து கொண்டு இருக்கிறார். இரண்டாவது இடத்தில் ஜடேஜா இருக்கிறார். அவர் 44 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார்.

Story first published: Saturday, November 23, 2024, 13:53 [IST]
Other articles published on Nov 23, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+