Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனி, ரெய்னா திடீர் ஓய்வு.. அப்ப ஐபிஎல்-இல் ஆட மாட்டாங்களா? கவலையில் ரசிகர்கள்.. பதில் இதுதான்!

சென்னை : ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று இரவு இந்திய கிரிக்கெட்டின் முன்னணி வீரர்கள் தோனி, சுரேஷ் ரெய்னா அடுத்தடுத்து ஓய்வை அறிவித்தனர்.

Recommended Video

Dhoni's emotional retirement video on Instagram

அவர்கள் இருவரும் ஓய்வு முடிவை சிறிய செய்தியாக இன்ஸ்டாகிராமில் வெளியிட்டனர். அது, சில ரசிகர்களுக்கு அது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

ரசிகர்கள் குழப்பம்

ரசிகர்கள் குழப்பம்

அவர்கள் இன்ஸ்டாகிராம் பதிவுகள் மூலம் இருவரும் சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றதாக தெரிய வருகிறது. எனினும், ஐபிஎல் தொடரில் அவர்கள் ஆடுவார்களா? என சில ரசிகர்கள் குழப்பம் அடைவதையும் சமூக வலைதளங்களில் பார்க்க முடிகிறது.

தோனி ஓய்வு

தோனி ஓய்வு

தோனி 2019 உலகக்கோப்பை தொடருக்கு பின் ஓய்வு முடிவை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் 2020 ஐபிஎல் தொடருக்கு முன் அந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட அடுத்த சில நிமிடங்களில் சுரேஷ் ரெய்னாவும் ஓய்வை அறிவித்தார்.

அதிர்ச்சி

அதிர்ச்சி

தோனி வெளியிட்ட அறிவிப்பால் அதிர்ச்சியில் இருந்த ரசிகர்கள், அடுத்து சுரேஷ் ரெய்னாவும் ஓய்வை அறிவித்ததால் மேலும் உணர்ச்சிவசப்பட்டனர். என்ன நடக்கிறது? என புரியாமல் குழம்பினர். வேறு சில வீரர்களும் ஓய்வை அறிவிப்பார்களா? என்று கூட கேட்கத் துவங்கினர். நல்ல வேளையாக அப்படி ஏதும் நடக்கவில்லை.

கேள்வி

கேள்வி

தோனி, சுரேஷ் ரெய்னா இருவரும் இன்ஸ்டாகிராமில் சிறிய பதிவு மூலம் தங்கள் ஓய்வை அறிவித்து இருந்தனர். அதில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு என்ற வார்த்தைகள் கூட இடம் பெறவில்லை. அதனால், அவர்கள் 2020 ஐபிஎல் தொடரில் ஆடுவார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஐபிஎல் தொடரில் பங்கேற்பார்கள்

ஐபிஎல் தொடரில் பங்கேற்பார்கள்

தோனி, சுரேஷ் ரெய்னா இருவரும் நிச்சயம் ஐபிஎல் தொடரில் பங்கேற்பார்கள். அதற்காகவே அவர்கள் இருவரும் சென்னை கிளம்பி பயிற்சி முகாமில் பங்கேற்க வந்துள்ளனர். அவர்கள் நிச்சயம் ஐக்கிய அரபு அமீரகம் சென்று 2020 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக ஆடுவார்கள்.

என்ன காரணம்?

என்ன காரணம்?

அவர்கள் ஏன் ஐபிஎல் தொடருக்கு முன்பாக ஓய்வு அறிவிப்பை வெளியிட வேண்டும்? சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான் தோனி, சுரேஷ் ரெய்னாவுக்கு கட்டுக் கடங்காத, அன்பான ரசிகர் கூட்டத்தை கொடுத்துள்ளது. அதனால் சென்னை மண்ணில் ஓய்வை அறிவிக்க அவர்கள் விரும்பி இருக்கலாம்.

சுதந்திர தினத்தில் ஓய்வு

சுதந்திர தினத்தில் ஓய்வு

தோனி நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் விதத்தில் சுதந்திர தினத்தில் தன் ஓய்வு முடிவை அறிவித்து இருப்பதாகவே கருதப்படுகிறது. தோனியில் நிழலாகவே இருந்து வந்த சுரேஷ் ரெய்னா அவரைப் பின்பற்றி ஓய்வை அறிவித்து இருக்கிறார்.

பயிற்சி வீடியோ

பயிற்சி வீடியோ

தோனி ஓய்வு அறிவிப்புக்கு முன்னர் கூட பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். அது தொடர்பான வீடியோ கூட சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. அதனால், ரசிகர்கள் யாரும் குழப்பம் அடைய வேண்டாம். ஐபிஎல் தொடரில் சிஎஸ்கேவின் மஞ்சள் உடையில் தோனி, ரெய்னாவை விரைவில் காணலாம்.

Story first published: Saturday, August 15, 2020, 22:57 [IST]
Other articles published on Aug 15, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+