For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என்னங்க கிரிக்கெட்ல இப்படி எல்லாம் நடக்குது.. பௌலர்ஸ் மாஸ்க் அணிய வேண்டிய நேரம் வந்தாச்சா?

Recommended Video

பௌலர்ஸ் மாஸ்க் அணிய வேண்டிய நேரம் வந்தாச்சா?- வீடியோ

கொல்கத்தா : சமீபத்தில் பயிற்சிப் போட்டி ஒன்றில் மேற்கு வங்காள கிரிக்கெட் வீரர் அசோக் டிண்டா, முகத்தில் காயமடைந்தார்.

இது கிரிக்கெட்டில் பந்துவீச்சாளர்களுக்கு இருக்கும் பாதுகாப்பு குறித்த விவாதத்தை துவக்கி வைத்துள்ளது. சிலர் பந்துவீச்சாளர்கள் முகம் மற்றும் தலையை மறைக்கும் வகையில் பாதுகாப்பு கவசம் அணிந்து கொள்ள வேண்டும் என கூறி வருகின்றனர்.

தவானை தூக்கிட்டு இவரை ஓபனிங்ல இறக்குங்க.. சூப்பர் ஐடியா கொடுத்த ஷேன் வார்னே.. கோலி காதுல விழுமா? தவானை தூக்கிட்டு இவரை ஓபனிங்ல இறக்குங்க.. சூப்பர் ஐடியா கொடுத்த ஷேன் வார்னே.. கோலி காதுல விழுமா?

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

குறிப்பிட்ட சம்பவத்தில், அசோக் டிண்டா பந்து வீசினார். பேட்ஸ்மேன் அந்த பந்தை நேராக அடித்தார். கேட்ச் பிடிக்க வாய்ப்பு இருந்ததால், அசோக் டிண்டா பந்து வீசி முடித்த நிலையில், அப்படியே பந்தை பிடிக்க முனைந்தார். அப்போது பந்து அவரது முகத்தில் கடுமையாக தாக்கியது.

பாதுகாப்பு கவசம் வேண்டுமா?

அசோக் டிண்டாவுக்கு பெரிய காயம் எதுவும் இல்லை என்றாலும், பந்துவீச்சாளர்கள் இனி முகத்துக்கு பாதுகாப்பு கவசம் அணிய வேண்டிய நிலை வந்துவிட்டதா? என்ற கேள்வியை முன் வைத்துள்ளது. இது பற்றி இந்திய பந்துவீச்சாளர்கள் ஜெயதேவ் உனட்கட் மற்றும் அஸ்வின் ட்விட்டரில் கருத்து கூறி உள்ளனர்.

நேரம் வந்துவிட்டது

கிரிக்கெட்டின் வளர்ச்சியில் பந்துவீச்சாளர்கள் முகத்துக்கு மாஸ்க் அணிய வேண்டிய நேரம் வந்துவிட்டது. எப்படி இது போன்ற சம்பவங்கள் நம் விளையாட்டில் அதிகம் நடக்கிறது? நீங்கள் என்ன சொல்கிறீர்கள் அஸ்வின்? என இந்த கேள்வியை அஸ்வினிடம் கேட்டார் ஜெயதேவ்.

டி20 தான் காரணம்

அஸ்வின் இதற்கு பதில் அளித்துள்ளார். 2011இல் இருந்து சொல்லி வருகிறேன். இது போன்ற சம்பவங்கள் டி20க்கு முன் நடந்ததில்லை. ஏதோ ஒன்று நிச்சயம் மாறி விட்டது. அது என்னவாக இருக்கும்? என கூறி இருக்கிறார்.

ஹெல்மட் வளர்ச்சி

ஹெல்மட் வளர்ச்சி

கிரிக்கெட்டில் முன்பு ஹெல்மட் என்ற ஒன்றே இல்லாத காலம் இருந்தது. பின்னர் சில பேட்ஸ்மேன்கள் தலைக்கு மட்டும் ஹெல்மட் அணிந்து கொண்டனர். பின்னர் வேகப் பந்துவீச்சின் வளர்ச்சியில் முகத்தையும் சேர்த்து பாதுகாக்கும் ஹெல்மட் அணியும் வழக்கம் வந்தது.

பிலிப் ஹியுஜஸ் மரணம்

பிலிப் ஹியுஜஸ் மரணம்

2017இல் ஆஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியுஜஸ் பவுன்சர் பந்து தாக்கி மரணமடைந்தார். அப்போது முதல் தான் ஐசிசி பேட்ஸ்மேன்களுக்கு ஹெல்மட் கட்டாயம் என்ற விதியை கொண்டு வந்தது. அதுவரை அப்படி ஒரு விதி இல்லை என கூறப்படுகிறது.

பாதுகாப்பு முக்கியம்

பாதுகாப்பு முக்கியம்

டி20யின் வளர்ச்சிக்கு பின் சில அம்பயர்கள் டி20 போட்டிகளில் மட்டும் பாதுகாப்பு கவசம் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போது பந்துவீச்சாளர்களும் இது போல பாதுகாப்பு கவசம் அணிய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

Story first published: Thursday, February 14, 2019, 18:35 [IST]
Other articles published on Feb 14, 2019
English summary
Bowlers may need Face mask after Ashok Dinda injury. Jayadev Unadkat asks Ashwin about it.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X